Tuesday, July 5, 2022

தன்னியக்கவியல் (Autophagy)

 

தன்னியக்கவியல் (Autophagy)

======================




Book Download Link:- 


தன்னியக்கவியல் (Autophagy) என்றால் என்ன?

புதிய, ஆரோக்கியமான செல்களை உருவாக்கவும், சேதமடைந்த பழைய செல்களை சுத்தம் செய்வதற்காகவும் நம்முடைய உடல் தன்னைத்தானே சரிப்படுத்துகின்ற முறைக்கு “தன்னியக்கவியல்” என்று கூறலாம்.
அதாவது, பல செல்களால் ஆன மனித உடல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கின்ற புனித முறைக்கு இந்த பெயர் மருத்துவ உலகத்தாரால் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தன்னியக்கவியல் (Autophagy) நவீன அறிவியல் பெயர் என்றாலும், இதை பெயரில்லா பெரியசாமிகளாக இருந்த நம் சித்தர் பெருமக்கள் ஏற்கனவே நம்மிடையே அறிமுகப்படுத்தியுள்ள ‘உண்ணா நோன்பு’ முறை என்பதாகும்.
"ஆட்டோ" என்றால் சுயம் மற்றும் "பேகி" என்றால் சாப்பிடு என்றும்ன் பொருளில் தன்னைத்தானே சாப்பிடும் வழிமுறைக்கு ஆட்டோபேகி என்று அழைக்கின்றனர் இன்றைய நவீன அறிவியல் வல்லுஞர்கள்.
அதாவது, தன்னியக்கத்தின் நேரடி பொருள் "சுய உணவு" என்பதாகும். இதை "சுய விழுங்குதல்" என்றும் குறிப்பிடப்படுகிறது.
இது உங்கள் உடலுக்கு ஒருபோதும் நடக்க விரும்பாதது போல் தோன்றினாலும், இது உண்மையில் உங்கள் உடலுக்குள் அனுதினமும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த சுயவிழுங்குதல் மூலமே மனிதன் தன்னைத்தானே புதிப்புத்துக் கொண்டு, ஆரோக்கியத்துடன் ஆனந்தமாக வாழ முடிகின்றது.
இது எப்படி சாத்தியமாகிறது?
நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நமக்கு ஒரு காயம் உண்டாகி விடுகின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த காயம் ஏற்பட்ட மேல் தோல், நாளடைவில் கெட்டு விழுந்து விடுகின்றது.
அதன்பிறகு, அதே இடத்தில் நமக்கு புதிய தோல் உண்டாகி இருப்பதை நாம் காண்கிறோம்.
இதிலே என்ன நடைபெற்றது என்று கவனித்தீர்களேயானால், நம்முடைய மேல் தோல் என்பது பல செல்களின் கூட்டமைப்பு என்பதினால், நமக்கு ஏற்பட்ட காயத்தினால் அந்த இடத்தில் இருந்த செல்கள் இறந்துவிட்டன. அதன் பிறகு அந்த இடத்தில் புதிய செல்கள் உண்டாகி விட்டன.
இதிலிருந்து ஒன்று மட்டும் நமக்கு நன்றாகத் தெரிகின்றது.
அதாவது, இறந்த செல்களுக்கு பதிலாக, புதிய செல்களை நம் உடலே உண்டாக்கிக் கொள்ள முடிகிறது என்பதை எல்லோராலும் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.
ஏனென்றால், தன்னியக்கவியல் என்பது ஒரு பரிணாம சுய-பாதுகாப்பு செயல் முறையாகும்.
இதன் மூலம் உடல் செயலிழந்த செல்களை அகற்றி, அவற்றின் பாகங்களை செல்லுலார் பழுதுபார்ப்பு மற்றும் சுத்தம் செய்ய மறுசுழற்சி செய்கின்றது.
உடலின் இந்த தன்னியக்கத்தின் நோக்கம் தன் உடலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, தன்னைத்தானே சுய-ஒழுங்குபடுத்துவதாகும்.
இது எப்படி நம் உடலில் நடைபெறுகிறது?
அதாவது, ஒரு செல் உயிரி அமீபா போன்று, மனிதன்பல செல் உயிரினம் என்பதினால், இவனது உடலின் ஒட்டு மொத்த இயக்கமும் இவன் உண்ணும் உணவினால் ஆற்றலாக மாறி, அதன் காரணமாக அந்த செல்கள் தன்னைத்தானே புதிப்புத்துக் கொண்டு, இறந்த பழைய செல்களையும் தன்னுடைய உணவாக உட்கொண்டு விடுகிறது.
அதாவது மனித உடல் வளர்வதற்கு ஆதாரமாக இருப்பது எது? என்று கேட்டால், அது அவன் உண்ணும் உணவே ஆகும்.
ஆக, உணவினாலேயே உடல் வளர்கிறது.
அந்த உடல் வளர்ச்சியின்போது இறந்த செல்களை, புதியதாக உருவான செல்களே உணவாக உட்கொள்ள வேண்டும் என்றால், மனிதன் வெளியே இருந்து உணவு உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது, உண்ணும் அளவறிந்து உண்பதும், தக்க பசி வந்தவுடன் உண்பதும் மட்டுமே, மனிதன் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
ஆகவே, இந்த உடலுக்கு உணவு கொடுக்கும் நேரம் அடிக்கடி என்று இல்லாமல், காலை 8 மணிக்கு பகல் உணவு என்றும், மதியம் 12 – 1 மதிய உணவு என்றும், அத்துடன் இரவு உணவு அவசியம் மாலை 6 மணிக்கு எனவும் எடுத்துக் கொள்ளும் போது, அவனது உடல் ஆரோக்கியத்தை அடைகிறது.
எப்படி?
அதாவது, காலை முதல் மாலை வரை 4 மணி நேர இடைவெளி எடுத்து உணவு உட்கொண்ட மனிதன் அதன் வாயிலாக கிடைத்த ஆற்றலைக் கொண்டு, அனைத்து காரியங்களையும் செய்துவிட்டு, இரவு நேரம் உடல் ஓய்வுக்காக உறங்கச் செல்கிறான்.
இதிலே, மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 8 மணிவரை என 14 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், இவனது உடலில் உண்டான புதிய செல்கள், வெளி உணவு உள்ளே வராத அந்த குறிப்பிட்ட நேரத்தில் இவனது உடலில் உள்ள இறந்த செல்களையே உணவாக உட்கொள்கின்றன.
இதை இன்றைய நவீன விஞ்ஞான அறிவியல் ஆராய்ந்து வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே, நம் பண்டைய ரிஷிகள் உடலில் ஆரோக்கியம் கருதி, உண்ணா நோன்பு முறையை நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
அத்துடன், அவ்வாறுதான் காலையும், இரவும் உணவு உண்ணும் பழக்க வழக்கங்களை வைத்திருந்தனர்.
ஆனால், இன்றைய கல்வி முறையில் உண்டான மாற்றத்தினால், மனிதன் நினைத்த நேரத்திற்கு நிதானமில்லாமல் உணவு உட்கொள்வதும், கண்டதை, கண்படி, கண்ட நேரங்களில் கட்டாயமாக உட்கொள்வதும் இன்றைய நாகரீகம் ஆகி விட்டது.
அதே சமயம், அன்றைய ரிஷிகளாகிய மருத்துவர்கள் அறிவுறுத்திய படி அவசியம் தினமும் இரவு 14 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால், இவனது உடலில் உள்ள இறந்த செல்களை, புதியதாக வந்துள்ள செல்களே உணவாக உட்கொண்டு விடும்.
இதன் காரணமாக, இவனது உடலில் உள்ள செல் கழிவுகள் அகற்றப்பட்டு, அவனது உடல் புத்துணர்ச்சியுடன் புதியதாக ஆரோக்கியத்துடன் கூடியதாக அமைந்துவிடும்.
அதைவிடுத்து, அனாவசியமாக, அனைத்து நேரங்களில் அனைத்து வகை உணவுகளையும் அள்ளி, அள்ளி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் என்றால், எத்தனை நாட்கள் ஆனாலும், அந்த உடலில் உள்ள செல் கழிவுகள் வெளியேறாமல், அவன் உடலிலேயே தங்கி கேன்ஸர் போன்ற கொடிய நோய்க்கு வழி வகுத்துவிடும்.
இதை அறியாத இன்றைய இளைய சமுதாயம் எல்லா நேரங்களிலும் சாப்பிடுகின்றது, எல்லா நேரங்களிலும் உறக்குகின்றது அல்லது ஓடி. ஓடி உழைக்கின்றேன் என்று உடலை வருத்துகின்றது.
இந்த தவறான பழக்க வழக்கங்களினால், இன்றைய மனித சமுதாயம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, அனைத்து மருத்துவ மனைகளிலும் மல்லுக்கட்டிக் கொண்டு, மருத்துவம் பார்க்க காத்திருக்கின்றது.
இத்தகைய மருத்துவ அவலங்கள் இன்று உண்டானதற்குக் காரணம், மனிதன் மகத்தானவனாக மாற வேண்டியதை விடுத்து, மட்டமானவனாக மாறத் தொடங்கியதின் விளைவு என்றுதான் கூறவேண்டும்.
காரணம்?
ஒழுக்கம் என்றால் என்ன?
என்பதை இன்றைய இளைய சமுதாயம் அறியாமல் இருப்பதுதான், இதற்குக் காரணம் எனலாம்.
அதாவது, நீர் ஒழுக்கு எங்கிருந்து வரும்?
மேலே இருக்கின்ற விட்டத்தில் இருந்துதான் நீர் ஒழுக முடியும். எந்த நிலையிலும், கீழே இருந்து, நீர் சொட்டு, சொட்டாக ஒழுக முடியாது அல்லவா?
அதுப்போன்று, ஒழுக்கம் என்பதும், மேலானவர்களிடமிருந்து சிறிது, சிறிதாக கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு ஆகும்.
ஆனால், இன்றைய இளைய சமுதாயம் எல்லாவற்றையும் கீழானவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறது.
இதன் காரணமாகத்தான் இந்த இழிவான வாழ்க்கையை இவர்கள் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
எவன் ஒருவன் மேலானவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி, அவைகளை தன்னுடைய வாழ்க்கையில் வழக்கத்துக்கு கொண்டு வந்து, சிறிது, சிறிதாக அவைகளை அனுபவத்திற்கும் கொண்டு வருகிறானோ, அதுவே ஒழுக்கம் என்று கூறப்பட வேண்டும். அதாவது, மேலானவர்களின் வாழ்க்கை முறையை தன் நடைமுறை வாழ்க்கையில் அனுபவமாக்கும் அவனே அனைத்திற்கும் மேலான மனிதனாக உயர்ந்து, மற்றவர்களையும் மகத்தான மனிதனாக மாற்றி வாழ வைக்கின்ற புனிதனாகவும் மாறுகிறான்.
எனவே, இறைவழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளிலும் உண்ணா நோன்பை புகுத்தி, புத்துயிர் பெற்று வாழும் வாழ்க்கை முறையை அனுசரித்து வாழுகின்ற மனிதன், தன் உடலில் உண்டான அந்த புதிய செல்களுக்கு, தன் உடலில் இறந்த பழைய செல்களை உணவாக உட்கொள்ள உதவி செய்கிறான்.
அவனே ஆரோக்கியத்துடன் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து இந்த உலகத்திற்கு பல நன்மைகளை செய்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நன்றி! 🙏

1 comment:

  1. தற்காலத்திற்கு தேவையான மிகவும் அவசியமான பதிவு.
    மிக்க மகிழ்ச்சி அப்பா

    ReplyDelete

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...