Saturday, March 9, 2013

தேனின் மருத்துவ குணங்கள்


தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1.
தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

2.
தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

3.
வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4.
தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவே மருந்து

பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது.
 

தலைவலி

1. ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
2. விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி  எடுத்து விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.
3. தலைவலி, மூக்கடைப்பு நீங்க நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் சிறிது அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.
4, நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
5. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
6. ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியைப்பிடித்தால் தலைவலி குணமாகும்.

7. தலைபாரம், நீரேற்றம் நீங்க இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.
தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
ஜலதோஷம்
1. ஜலதோஷம்   காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
2. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

3. சளிகட்டு நீங்க  தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.
4. சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

5. கபம் நீங்கி உடல் தேற கரிசலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட பம் நீங்கி உடல் தேறும், மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.
மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

இருமல்

1. எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
2. அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி  1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.
   
3. வறட்டு இருமல் குணமாக கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

4. விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.

பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த

தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.


தும்மல் நிற்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்

காசநோய் குணமாக

1. செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

2. காசம் இறைப்பு நீங்க கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.




Friday, March 1, 2013

இதயத்தை காக்கும் சீதாப்பழம்



பழவகைகளில் சீதாப்பழத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. இப்பழத்தின் தாயகம் தென் அமெரிக்கா ஆகும். சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் கஸ்டர்ட் ஆப்பிள்என்று பெயர். இதன் தாவரவியல் பெயர், ‘அனோனா ஸ்குவா மோசா.ஆங்கிலத்தில் சுகர் ஆப்பிள்என்றும் ஒரு பெயர் உண்டு. இந்தியாவில் அசாம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திராவில் சாகுபடி ஆகிறது.

வகைகள்
சீதாப்பழத்தில் பல வகைகள் உள்ளன. அதிக அளவில் சாகுபடியிலுள்ள சீதாப்பழவகைகள், பாலநாகர், சிவப்பு சீதா, மேம்மத்பார்படாஸ், ஐலேண்டர், இளஞ்சிவப்பு சீதா, கபூல், டர்கிஸ் வெள்ளை, வாஷிங்டன், பிரிட்டிஷ்கினி, ஆகிய பத்து வகைகள் ஆகும்.

சத்துப் பொருட்கள்

நூறுகிராம் சீதாப்பழத்தில் அடங்கி உள்ள பொருட்கள் கீழ்கண்டவாறு இருக்கின்றன.
·   புரதம் 1.6 கிராம்
·   நார்ப்பொருள் 3.1 கிராம்
·   மாவுப் பொருள் 23.5 கிராம்
·   கொழுப்புச் சத்து 0.3 கிராம்
·   கால்சியம் 17 மில்லிகிராம்
·   பாஸ்பரஸ் 47 மி.கி.
·   இரும்புச் சத்து 1.5 மி.கி.
·   மெக்னீசியம் 48 மி.கி.
·   பொட்டாசியம் 34 மி.கி.
·   தாமிரம் 0.52 மி.கி.
·   குளோரின் 3.7 மி.கி.
·   தயாமின் 0.07மி.கி.
·   ரைபோஃபிளோவின் 0.20 மி.கி.
·   நியாசின் 1.3 மி.கி.
·   வைட்டமின் சி’ 37 மி.கி.
·   ஆக்சாலிக் அமிலம் 30 மி.கி.
·   சக்தி 104 கலோரிகள்

எப்படி சாப்பிடலாம்?
சீதாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. நன்கு பழுத்த பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு சதைப்பகுதியை அப்படியே சாப்பிடலாம். பழச்சாறு, சாஸ், செரப் காண்டி, கீர் முதலியன தயாரித்து உண்ணலாம். பழச்சாறுடன் எலுமிச்சம்பழச்சாறு, தேன் கலந்து மிக்சட் பானம் தயாரித்தும் சாப்பிடலாம். பழத்தின் சதைப் பாகத்தைத் தனியாக எடுத்து சாப்பிடுவதுதான் அதிகமாக வழக்கத்தில் உள்ளது. பலவகை இனிப்புகளும் செய்து உண்ணலாம்.

பொதுப் பயன்கள்

சீதாப்பழச்சாறில் பல வகை பண்டங்கள் பானங்கள் தயாரிக்கப்படுகிறது. 

காண்டி, சாக்லெட், மிட்டாய், கேக், பிஸ்கெட்கள் செய்ய உதவுகிறது. 

சீதாப்பழத்துடன், பால் சேர்த்து கீர் தயாரித்தால் சுவை சூப்பராக இருக்கும். 


இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம். காசநோயைக் குணப்படுத்தும். 
குளிர்ச்சியூட்டி, நீர்ப் பெருக்கி, மலமிளக்கி, குடல் புண்ணைக் குணப்படுத்தும் சோர்வை நீக்கும். 

பித்தம் அகற்றி, இரத்தத்தை விருத்தி செய்யும். 

நினைவாற்றலை அதிகரிக்கும். 

தூக்கம் தூண்டி சருமத்தை நன்கு இயல்பு நிலையில் பராமரிக்கும்.

மருத்துவப் பயன்கள்

சீதாப் பழத்தி லுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சீதாப்பழத்தைத் தின்போம். இதயத்தைக் காப்போம்.

ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள், இப்பழத்தைத் தின்று வர, நோய் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.

சீதாப்பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் கொடும் தாகம் தணியும். உடல் குளிர்ச்சி பெறும். கோடை உபாதைகள் எட்டிப் பார்க்காது.
தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால், ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால், உடனே வாந்தி, குமட்டல் நிற்கும்.

அறுவை சிகிச்சைக்குப் பின், சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாய்ந்து விடும்.

சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, குடற்புண் விரைவில் குணமாகும்.

சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.

உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர, ஊளைச்சதை கணிசமாக குறையும்.

சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும்.
இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு என ஜெர்மன் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருகிறது.

உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.

சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும்.

ஆரம்பநிலை, மனநோயாளிகளும், சீதாப்பழத்தை தினம் தொடர்ந்து தின்று வர 41 நாட்களில் நல்ல குணமடைவர்.

இரவில் படுக்கப் போகும் முன் ஒரு சீதாப்பழத்துடன் இரண்டு பேரீச்சம் பழமும் தின்றால், நன்கு தூக்கம் வரும். 

தூக்கம் வராது அவதிப்படுபவர்களுக்கு, இது ஒரு நல்ல எளிய இயற்கை மருந்து. அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள், சீதாப்பழம் தின்று வர, தசைகளை சீராக இயங்கச் செய்யும்.

சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.

சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் சிஉள்ளதால், சளி பிடிக்காது தடுக்கும் தன்மையை உண்டாக்கும். சளிப் பிடித்தவர்கள்,  
இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நன்கு சளி குணமாகி நலன் கிட்டும்.

சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்டிரால் சேராது காக்கும்.

சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும்.

சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.
 



செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...