Thursday, July 26, 2012

மருத்துவ குறிப்புகள் - 1




 இரத்த சோகை 

இரத்த சோகை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், இரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் இரத்த சோகை உண்டாகும். வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை யினாலும் இரத்த சோகை உண்டாகும். இரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் இரத்த சோகை ஏற்படும்.

பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. இரத்தத்தில் பித்தம் அதிகரித்துஇ ரத்தம் சீர்கேடு அடைகிறது. இதனால் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.


அஜீரணத்தை போக்க

அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் போன்றவையும் அஜீரணத்தை ஏற்படுத்தும் எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.வயிறு முட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவளத்தை நெய்யுடன் கலந்து உண்ணவும். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீரில் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டும். 

நன்மை தரும் பாப்கார்ன்

ஒரு கிண்ணம் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதை போன்று இதில் அடங்கியுள்ள தாது உப்புக்கள், ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியாதாக உள்ளது. மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை போன்று மிகவும் சத்தானது உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது. 


பொடுகு தொல்லை

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கூந்தலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் தேங்காய் எண்ணெயை உபயோகிக்கின்றனர். தேங்காயில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் போல தேங்காய் பால் கூந்தலை பாதுகாக்க உதவுகிறது.  கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு உதிராமல் தடுத்து கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

தேங்காய் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்கள், தாது உப்புகள், பொட்டாசியம், போலேட் போன்றவை காணப்படுகின்றன.


சைனஸ்

ஒரு சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும், தும்மலுடன் கூடிய சளி அவர்களை வாட்டி எடுத்துவிடும் ,சிலருக்கு இருமலும் சேர்ந்துக் கொடுமைபடுத்தும் இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

அழகு தரும் தேங்காய்

அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய், இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும்.


சிறுநீரக பிரச்சினை


சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர்பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்றவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


                                                                            மீண்டும் வரும்.........

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...