Saturday, February 23, 2013

பாத பித்தவெடிப்புக்கான தீர்வு

பெண்களுக்கு பாதிப்பையும், கவலையையும் தருவது பாத வெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு. இவை ஒரு வகையான பூஞ்சை காளான்களால் வருகிற பிரச்சினையாகும். தோல் இறுகி கடினமாகி வழவழப்பினை இழந்து வெடித்துப் பிளந்து பார்ப்பதற்கே அருவெறுப்பினை தரும். இந்த பிரச்சினை அநேகமாக பத்தில் ஐந்து பெண்களுக்காவது இருக்கிறது.

இவற்றிற்கு தற்போதைய நவீன மருத்துவம் நிறைய தீர்வுகளை அளித்தாலும், அவை செலவு பிடிப்பதாகவும், முழுமையான தீர்வினை தருவதாகவும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த பிரச்சினைக்கு தேரையர் எளிமையான இரண்டு தீர்வினை நல்கியிருக்கிறார். அதனையே இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.

தனது தேரையர் வாகடம் என்னும் நூலில் தேரையர் இந்த முறைகளை அருளியிருக்கிறார்.

"உப்பு மண்புழுங் கரிசியூ மத்தவித் திந்துப்புத் தயிரொ
டெருக்கம்பால் ஒக்க விரைப்பன விற்பா தப்பிளப் படங்கப்பூச
நிலைவிற் றாமரை யாங்காலே யறுத்துப் போடும் வேரோடே."

உப்பு மண்”, “புழுங்கலரிசி”, “ஊமத்தை விதை”, “இந்துப்புஇவை நான்கினையும் சம அளவில் எடுத்து, தயிர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்தக் கலவையில் எருக்கம் பால் விட்டரைத்துக் கால்களில் அப்பி வைத்தால் கால் வெடிப்புகள் அடியோடு நீங்கி விடும் என்கிறார். மேலும் பாதம் தாமரைப் பூப்போல் ஆகுமாம்.

இதே பிரச்சினைக்கு மற்றொரு தீர்வாக பின் வரும் பாடலையும் தந்திருக்கிறார் தேரையர்.

"காத்துக் கஞ்சிநீர்காலசா தத்தினடுக்
கொண் ணெறித்தி ரிக்குதென
நீற்றுப் பாலநெய்யில்காலிட வல்லீரெல்
சேத்துத் தாமரை செய்யிதழொக்குமே."

சூடான வடிகஞ்சியில் காலை வைத்தும், சூடான அன்னத்தைச் சுடுகஞ்சி விட்டு அரைத்துக் அத்துடன் கற் சுண்ணமும் கலந்து சூடாகக் கால்வெடிப்பின் மேல் பூசி வந்தாலும் பாத வெடிப்பு நீங்கி, பாதம் தாமரை இதழைப் போல ஆகுமென்கிறார்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...