நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு
மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு
தேவை என்றளவே தெரிந்திருந்தது.
நாளாக நாளாக நிலத்தைப் பண்படுத்தி, சாகுபடி
செய்யக் கற்றுக்
கொண்டபின், அவனது உணவிலும்
மாற்றம் ஏற்பட்டது.
தானியங்கள், காய்கறிகள் பழங்களைச் சாப்பிட ஆரம்பித்தான். நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உணவைச் சமைத்து சாப்பிட முடியும் என்பதைத் தெரிந்து கொண்டதும் சைவ உணவை அதிகமாக உட்கொள்ளத் துவங்கியதும், விவசாயமும் வளர ஆரம்பித்தது.
கால்நடைகளைக் கொன்று தின்பதற்குப் பதில் அவற்றை விவசாய வேலைகளுக்குப் பயன் படுத்தவும் அவற்றிடமிருந்து கிடைக்கும் பால், தயிர் போன்றவற்றை உணவாக அருந்தவும் தெரிந்து கொண்டதும்,
கால்நடைகளைவளர்க்க ஆரம்பித்தான்.
ஆடு, மாடுகளின் மாமிசத்திற்குப் பதில் சுவை தரும் பால் பெரும்பாலோரது உணவாகியது.
ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளாகத் தான், ஜனத்தொகை அதிகரிக்க ஆரம்பித்ததும், உணவின் தேவையும் பெருகவே அவன் தாவர உணவுக்கு மாற்றாக வேறு உணவை நாடவேண்டியதாயிற்று.
மீண்டும் அசைவ உணவில் அவன் நாட்டம் திரும்பியது. விஞ்ஞான அறிவு வளர ஆரம்பித்ததும் தாவர உணவில் கிடைக்கும் புரதச்சத்தை விட மிக அதிகளவு புரதமும், அமினோ அமிலங்களும் (மாமிச உணவில்) இருப்பதை அறிந்து மனிதர்களுக்கு அது தேவையான உணவாகியது.
ஆனால், சமீபத்தில் நடத்திய ஆய்வுகளிலிருந்து மாமிச உணவில் புரதமும், அமினோ அமிலங்களும் அதிகம் இருந்தாலும், அதனால் உடலுக்குத் தீமைகளும் அதிகம் விளைகின்றன என்று கண்டறியப் பட்டது.
நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே உடல் நலமும் அமைகிறது. இரைப் பையில் ஜீரண நீர் சரியாக சுரக்க இந்தப் புரதமும், அதை ஜீரணிக்கும் சத்துக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாமிச உணவு சிறுகுடலில் தங்கி சரியாக ஜீரண மாகாமல் ஜீரணநீர் அதிகம் சுரக்க வேண்டியிருப்பதால் குடல் பகுதியை அந்த அமிலங்கள் பெரிதும் பாதிக்கின்றன.
குடலில் ஜவ்வு போன்ற மெல்லிய பகுதிதான் குடலைப் பாதிப் படையாமல் பாதுகாக்கிறது. இந்த அமில நீர் அதிகம் சுரப்பதால் ஜவ்வுப் பகுதிகள் அரிக்கப்பட்டு அதனால் குடல் புண் (அல்சர்) உண்டாகிறது.
மாமிச உணவில் அதிகம் உள்ள இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதியில் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.
தவிர, மாமிச உணவைத் தயாரிப்பதற்கு மசாலாப் பொருள்களை அதிகம் பயன் படுத்துவதாலும், மாமிச உணவுடன் சேர்த்து மதுபானங்களை அருந்துவதாலும் மேலும் தீங்கை விளைவிக்கிறது.
உணவுக் குழாய், வயிற்றுப் பகுதி, குடல் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் நமது உணவின் தன்மைக்கு ஏற்ப அமைகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சில வகைமீன்கள், அதிகளவு உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் முதலான நைட்ரோ அமினோ அமிலச் சத்துக்கள் அதிகம் உள்ள உணவாலும் அண்ணக்குழாய், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட ஏதுவாகிறது.
புரதமும், கொழுப்புச் சத்தும் மிகுந்த, நார்ச்சத்து அதிகமில்லாத உணவுகளாலும், பெருங்குடலில் அல்சர் நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதிலும் முக்கியமாக அசைவ உணவுகளில் இந்த தீமை அதிகமாகிறது.
நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட்டு மலம் சரியாகக் கழியாமல் குடல் பகுதி தடித்து வீங்கல் காரணமாக ஜவ்வுப் பகுதி அரிக்கப்பட்டு அல்சர் ஏற்படுகிறது.
தவிர, விலங்குகளிலிருந்து கிடைக்கும் மாமிச உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கவும் செய்கிறது. உணவு ஒவ்வாமை (அலர்ஜி) உடலுக்கு சில வகை உணவுகள் ஒத்துக்கொள்ளாமல் போவது காரணமாகவும் நோய் ஏற்பட வழிபடுத்துகிறது.
மூட்டு வலிகள் பற்றி கடந்த சில காலமாக ஆராய்ந்து பார்த்ததில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை உட்கொள்ளும்போது நோயின் தீவிரம் குறைவதைக் கண்டறிந்துள்ளனர்.
சிலவகை அலர்ஜி நோய்கள் ஏற்படுவதற்கும் அசைவ உணவே காரணம் என்பதையும் கண்டறிந்துள்ளனர். மாமிச உணவை ஜீரணிக்கையில் சில நச்சுப் பொருட்களும் வெளிப்படுகின்றன. இதனால் சில நோய்கள் ஏற்படுகின்றன. மாமிச உணவால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது.
கலோரிச் சத்துஅதிகம் உள்ளது. கொழுப்பும், புரதமும் மிகுந்து
காணப்படுகிறது. என்றாலும், சில தீய விளைவுகளும் அதனால் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
மேனாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் தமது உடம்பில் காயங்கள் ஏற்படுத்தி சில காலம் மாமிச உணவைச் சாப்பிட்டு வந்தபோது, புண் ஆறாமல் இருந்ததைக் கண்டார். பின் சைவ உணவுக்கு அவர் மாறியதும் விரைவில் குணம் ஏற்பட்டதை அறிந்தார்.
சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர் களுக்கு மாமிச உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.
புலால் உணவால் விலங்கு உணர்வுகளே மிகுந்து காணப்படுகின்றன. கொலை வெறித்தாக்குதல் போன்ற ராட்சச குணங்கள் மேலோங்குவதற்கு அசைவ உணவை உட்கொள்வதே காரணமாகும். மாறாக சைவ உணவை அருந்துபவர்களிடம் அன்பு, கருணை, கனிவு போன்ற தெய்வீக குணங்கள் நிறைந்திருப்பதுடன், சைவ உணவை உட் கொள்பவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாகவும் விளங்குகின்றனர்.
அண்மைக்காலமாக மேலை நாடுகளில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவையே உட்கொள்ளுமாறு தீவிர பிரசாரம் நடந்து வருவது கண்கூடு. சைவ உணவின் சிறப்பை உணர்ந்துதானோ, வள்ளுவரும் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் புலாலைத் தள்ளும்படி வலியுறுத்தியிருப்பதைக் காணலாம்.
‘கொல்லான், புலால் மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’
என்று அவர் சிறப்பித்துக் கூறுகிறார்.

நன்று
ReplyDelete