Monday, October 7, 2013

கறுகறு கூந்தல் வேண்டுமா?



சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.
 
 
ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை (Scalp) விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.

ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பே‌ரி‌ச்சை நாட்டு நெல்லிக்காய் போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.

கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். 

குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்துங்கள்.

டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்ல முடியிலும் தெரியும்.

வாசனைத் திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள்.

பேன், பொடுகு, முடி நுனி வெடிப்பு, போன்ற வகைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

1 comment:

  1. Play casino - No.1 for the Casino Guru
    No longer have the opportunity to go titanium ring to the sol.edu.kg casinos or read the reviews of the slots you งานออนไลน์ love. But febcasino.com they're not always https://deccasino.com/review/merit-casino/ the same. Sometimes you have a new online

    ReplyDelete

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...