நமது இந்திய அரசாங்கத்தின் அதி மேதாவிகளான அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறி நம்மையெல்லாம் சாவை நோக்கி கொண்டு செல்லும் அவலம் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
அப்படியென்ன அவர்கள் செய்கிறார்கள் என்றால்
ஒன்றா? இரண்டா? எளிதாகச் சொல்லிவிட........,
அதில் மிகவும் ஆபத்தானதும், இந்திய
மக்களை நோயாளிகளாக்கி பண்ணாட்டு மருந்து நிறுவனங்கள் வளமாய் வாழ்வதும் கண்கூடாகப்
பார்த்துவருகின்றோம்.
இப்படி மக்களை நோயில் வீழ்த்த அவர்கள்
மேற்கொண்ட முட்டாள்தனமான செயல் என்று எடுத்துக்கொண்டால் சாதாரண செருப்பு தைக்கும்
தொழிலாளி முதல் கொண்டு, வெளி நாட்டு கார்களில் பயணம் செய்யும் பணக்காரர்கள் வரை
சமையலில் போடும் சாதாரண உப்பு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்! நமது சமையல் உப்பில் மத்திய அரசு கடந்த
10 ஆண்டுகளுக்கு முன்பு அயோடின் கலந்த உப்பையே மக்களுக்கு விற்பனை செய்யவேண்டும்
என்ற சட்டத்தை அமுலாக்கியதுதான் காரணம்.
ஏனெனில், இந்தியப் பெண்மணிகளில்
பெரும்பாலானவர்கள் தங்களது பிரசவ காலங்களில் அயோடின் சத்து குறைபாட்டால்,
அவர்களுக்கு பிறக்கும் குழந்தை மந்த்தத்ன்மை உடையதாக பிறக்கும் என்பதால் அனைத்து
தாய்மார்களுமே இதிலிருந்து தப்பிக்க அரசு போட்ட ஆணை இது.
இதில் கொடுமை என்னவெனில் கடலோர
மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும், அதிகமாக காய்கறிகள், கீரைகள் சேர்க்கும் மக்களுக்கும்
இயல்பாகவே அயோடின் சத்து சேர்ந்துவிடும், இவர்கள் அரசு அனுமதியுடன் கட்டாயமாக அயோடின்
கலந்த சமையல் உப்பு விற்கப்படுவதால், அதனை சமையலில் சேர்த்து உண்டு அதிகப்படியான
அயோடின் சத்தினை உடல் ஏற்க்காமல் தைராய்டிடிஸ் (Thyriditis) என்ற நோயின் பாதிப்பிற்கு ஆளாகி தைராயிடு
சுரப்பியின் செயல்பாட்டில் மாறுதல் ஏற்பட்டு தொண்டையில் கட்டி, கண்களில் சிவந்த
நிறத்துடன்
கண்கள் பிதுங்கி கழுத்தில் பெரும் கழலைக் கட்டியுடன் பாதிப்படைதல், கை,கால் நடுக்கம், எடை குறைவு அல்லது அதிக எடை, சிறிது
நடந்தாலும் மூச்சு வாங்குதல், பசியின்மை போன்ற பல நோய் பாதிப்புக்கு ஆளாகி
வருகின்றனர்.
தைராய்டு என்பது நமது கழுத்துப்பகுதியில்
இருக்கும் நாளமில்லாச் சுரப்பி ஆகும். இது ”தைராக்ஸின்” ( T3, T4 ) என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றது. இது அளவோடு
சுரக்கவேண்டும். இந்த சுரப்பியை மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் தைராய்டு
ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என்ற ஹார்மோந்தான்
கட்டுப்படுத்தி சீராக சுரக்க வைக்கின்றது. தைராக்ஸின் சுரப்பதில் குறைபாடு
இருப்பின், அதாவது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சுரந்தால், அந்த சுரப்பி
பாதிக்கப்பட்டுள்ளது எனலாம். இதுவே அந்த சுரப்பி குறைவாக சுரந்தால் “ஹைப்போதைராய்டிஸம்”
என்றும், அதிகமாக சுரந்தால் "ஹைப்பர் தைராய்டிஸம்"என்றும் அழைக்கின்றனர்.
கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அயோடின்
குறைபாட்டால் “ஹைப்போதைராய்டிஸம்” இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைந்து, நினைவுத்திறன்
இன்றி மந்தமாக பிறக்கும். இதனால் கர்ப்பிணிகளுக்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது
என்கின்றது இன்றைய மருத்துவம்.
அயோடின் என்பது
அத்தியாவசியமானது என்றாலும் இதன் குறைபாடு 10,000-ல் ஒரு தாய்க்கு மட்டுமே
இருக்கும். யாருக்கு அதிக குறைபாடு என்று கண்டு அவர்களுக்கு மட்டுமே அயோடின் சத்து
கொடுப்பதை விட்டுவிட்டு மீதி உள்ள 9,999
கர்ப்பிணிகளுக்கும் இதனை சென்று சேர்ப்பது எந்த வகையில் நியாயம், மேலும் அனைத்து
ஆண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும், வயோதிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் அவர்கள்
தைராய்டு பாதிப்பு நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பது கண்கண்ட உண்மை.
இதில் இன்னும் நகைச்சுவையான
கொடுமை என்னவெனில் உப்பில் அயோடினைக் கலக்காமல் விற்றால் அவர்களை கலப்படச் சட்டத்தின்
கீழ் கைது செய்யவும் அரசு வகை செய்திருக்கிறது.
ஆதலால், தூத்துக்குடி
உப்பளங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படும் உப்பு அயோடின் கலந்த பிறகே விற்பனைக்கு
வருகின்றது. இதனால் நாம் அயோடின் கலக்காத உப்பினை வாங்கவே முடியாதபடி அரசு
பொதுமக்களின் சுதந்திரத்தில் கைவைத்துள்ளது, இந்தியாவில் நம்மை நாமே அடிமையாக்கிக் கொண்டோம்
என்பது மட்டுமே தற்போதைய உண்மை நிலை.
No comments:
Post a Comment