Tuesday, June 24, 2014

செல்லுக்கு ஒரு சொல்!


நல்ல ஆரோக்கியமான உடம்பு, தெளிவான மனசு இரண்டும் இல்லாமல், ஒருவரால், தான் நினைத்ததை அடைய முடியாது. 

நமது உடம்புக்கு, எந்த நேரத்தில், என்ன செய்யவேண்டும் என்பதனை நம்மைவிட நமது உடம்பிலுள்ள, "செல்” களுக்கு நன்றாகத் தெரியும்.

கண்ணில் தூசி விழுந்தவுடன், கண்ணை தேய்க்கத்தான் நாம் நம் அறிவால் முயற்சிப்போம், ஆனால் அந்த தூசியை வெளியே தள்ள குறிப்பிட்ட செல்கள் உடனடியாக தானாகவே தனது செயல்பாட்டினை தொடங்கிவிடும், ஆம் உடனடியாக கண்ணீர் மூலமாக அந்த தூசியை வெளியே கொண்டு வந்துவிடும்.

இப்படிப் பார்த்துப் பார்த்து, பல வேலைகளை செய்கின்ற நமது செல்களோட அறிவுத் திறன், செயல் திறன் மழுங்கிப் போகும் போது தான், நோய்கள் அதிரடியாக நம்மை தாக்குகின்றது.

நம்மிடையே, “ எதிர்மறை எண்ணங்கள் “ (Negative Commands) அதிகரிக்க அதிகரிக்க, நம் செல்களோட செயல்திறன் குறையத் தொடங்குகின்றது.

168 விதமான, “எதிர்மறை மனோ நிலை”” (Negative Mentality) நம்முடைய மனதை பாதிக்கின்றது. அதில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்மறை எண்ணங்களோ, நம்மைத் தாக்க ஆரம்பித்தாலே போதும் நமது உடம்புக்கு நோய் வந்துவிடும்.

நமக்கு பசி வந்தவுடனேயே நம் அறிவு,"சாப்பிடு” என சொல்லுகின்றது. அந்த நேரத்தில் நமக்கு உறவினரிடமிருந்து தொலைபேசியில் துக்கமான தகவல் செய்தி ஒன்று வருகின்றது. உடனே நாம் சாப்பிடாமல் விட்டுவிடுவோம். கவலைப்படுவோம், இவ்வாறு கவலைப்படுவதால், நமது உடம்பிலுள்ள சுரப்பிகளின் செயலில் மாற்றம் நிகழ்ந்து செல்களின் பணி பாதிப்படைந்து உடலின் தேவையை செய்ய விடாமல் தடை ஏற்படுத்துகின்றது.

ஒரு மருத்துவரின் முதல் கடமை, நோயாளியின் மனதை சரிசெய்வதுதான். துரதிஷ்டவசமாக, மருத்துவம் வணிகமயமாக மாறிவிட்டதால், இன்றைக்கு நோயாளிகளை அமைதிப்படுத்துவதற்கு பதிலாக, பயமுறுத்துதல் அதிகமாகிவிட்டது.

பயம் இல்லாமல் யாரெல்லாம் இருக்கின்றார்களோ?, அவர்களுக்கு, நோய் என்பது சீக்கிரம் குணமாகிவிடும். மனதை ரிலாக்ஸ் செய்ய சில பயிற்சிகள் இருக்கின்றன.

"இந்த நோய் குணமாகட்டும்” என்று, செல்லுக்கு ஒரு சொல் நாம் கட்டளையிட்டால், அந்த நோயிலிருந்து நாம் விடுபடமுடியும்.

நாம் நம்முடைய “ நோய் எதிர்ப்பு”, செல்களுக்கு (Immune System) அவ்வப்பொழுது சில, “நேர்மறை கட்டளைகளை” (Positive Commands) கொடுக்கலாம். இது அந்த நோயிலிருந்து நாம் முழுமையாக வெளியேற உதவும்.

நம்மை அமைதிப்படுத்தும் செயல்களான வழிபாடுகள் செய்வது, பக்திப்பாடல்கள் கேட்பது, தானம் செய்வது, பிறருக்கு உதவுவது எல்லாம், நம்முடைய மனதை சந்தோஷப்படுத்தி, நோய்கள் இன்றி வாழ வைக்கும் வழியாகும்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...