Thursday, August 13, 2015

அஜீரணம் சரியாக




அளவுக்கு அதிகமாக உண்பது, பசி எடுக்காமல் உண்பது போன்ற பழக்கத்தினால் வருவது அஜீரணம். இதனை எளிய முறையில் வீட்டு வைத்தியத்தினால் குணப்படுத்த முடியும்.
 
குப்பை மேனி இலையை கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதே அளவு உப்பையும் அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறிக் கொண்டேயிருந்தால் உப்பும் இலையும் கலந்து வெந்து சிவந்து கருகும். நன்றாகக் கருகி இலை தூளாகி விட்டபின் சட்டியை இறக்கி ஆறவைத்து, அம்மியில் வைத்துப்பட்டுப் போல தூள் பண்ணி ஒரு சீசாவில் போடு வைத்துக் கொள்ளவேண்டும். அஜீரணம் என்று தெரிந்தவுடன் காலை, மாலை அரைத் தேக்கரண்டியவு இதனை வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணம் மாறி நல்ல பசி உண்டாகும்.

பசி எடுக்க...

ஒரு வெற்றிலையைச் சுத்தம் பார்த்து அதில் ஏழு மிளகையும், சுண்டைக்காயளவு சீரகமும் சேர்த்து மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கச் செய்து சிறிதளவு வெந்நீர் குடிக்கக் கொடுத்தால், நல்ல பசி உண்டாகும்.    


அஜீரணப் பிரச்சினைக்கு ஒரு எளிய தீர்வு.

                                50 கிராம் சீரகத்தை பொன்னிறமாக வறுத்துபொடித்து வைத்துக் கொள்ளவும்.
                           
                               இதில் ஒரு மேசைக் கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும்.
                          
                              இதற்குச் சமமாக ஒரு மேசைக் கரண்டி அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.
                           
                              இவ்விரண்டையும் கலந்துவாயில் போட்டு  மென்று 
                              நீர் அருந்த, அஜீரணப் பிரச்சினை போயே போச்சு.  

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...