Thursday, August 13, 2015

வெண்படை (Leucoderma)


வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா எனப்படுகிறது.

மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூகரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.


வெண்படைக்கு எளிய மருந்து
********************************

* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்
* கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்

இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.

பிறகு அதை வடிகட்டி, இத்துடன்
* வெந்தயப் பொடி- 80 கிராம்

கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.

மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.

முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.


மேல்பூச்சுக்கான மருந்து
**************************
1.அவுரிச்செடி
2.குன்றிமணி

குன்றிமணி விதைகளை 50 கிராம் அளவு எடுத்து, ஊறவைத்து அதன் மேல் தோலை உரித்து எடுத்துவிடவேண்டும். நமக்கு தேவையானது அதன் பருப்புகள் மட்டுமே. அந்த பருப்புகளை 200 மி.லி அவுரி இலைச்சாறு விட்டு அரைக்க வேண்டும். அந்த விழுதை, குச்சி அல்லது பென்சில் போல நீளமாக உருட்டி காய வைக்க வேண்டும். கல்லில், சிறிது நீர் விட்டுஅதில் அந்த காய்ந்த மருந்து குச்சியை அரைத்தெடுத்து, வெண்படை உள்ள பகுதிகளில் பூசி வந்தால் குணம் பெறலாம்.

அவுரிச் செடி கிடைக்கவில்லையெனில் நாட்டுமருந்துக் கடையில் அவுரி இலைப்பொடி கிடைக்கும். அதை 100 கிராம் வாங்கி ஒரு லிட்டர் நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, 200 மி.லி.யாக சுண்டவைக்கவும். பின் அந்த சுண்டிய நீரில் குன்றிமணி பருப்புகளை அரைத்து, அந்த விழுதை குச்சி போல உருட்டி காய வைக்கவும். பின் அதை கொஞ்சம் நீர் விட்டு இழைத்து வெண்படை உள்ள இடங்களில் பூசவும்.

வாய் உள்ளே வெண்படை இருக்குமானால், உதாரணமாக கீழ் உதட்டின் உள்புறத்தில் வெண்படை இருக்குமானால், இந்த பூச்சை உள்ளே போடக்கூடாது. மாறாக கீழ் உதட்டின் வெளிப்புறத்தில் பூசிவிட்டால் போதுமானது. இந்த பூச்சு வாயில் படுவதை தவிர்க்கவும்.


2. வெண்படை தீர இன்னுமொரு மருந்து
******************************************

தேவையானவை:
1. கார்போக அரிசி-200கிராம்
2. இஞ்சிச்சாறு-50கிராம்
3. மஞ்சள் கரிசாலைச் சாறு-50கிராம்


இஞ்சிச்சாறு, கரிசாலைச்சாறு ஆகிய இவ்விரண்டு சாறுகளை ஒன்றாகக் கலந்து, அதில் கார்போக அரிசியை ஊறவைக்கவும். கார்போக அரிசியின் மேல்தோல் கழலும் அளவுக்கு ஊறவைக்கவும்.

அந்த அளவுக்கு ஊறிய பின் நன்றாக பிசறினால், மேல்தோல் தனியாக வந்துவிடும். மேல்தோல் நீக்கப்பட்ட கார்போக அரிசியை மட்டும் தனியே எடுத்து, அதில் இஞ்சிச்சாறு, மஞ்சள் கரிசாலைச் சாறு விட்டு மைபோல அரைத்து, மிளகளவு இருக்கும்படியாக, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

காலை, மாலை என இரு வேளையும், வேளைக்கு ஒரு மாத்திரையாக,
உணவுக்கு முன் உண்டுவர வெண்புள்ளிப் படலம் பூரணமாக குணமாகும்.

மருந்து உண்ணும் போது பத்தியமாக காபி, அகத்திக்கீரை, சிறுகீரை, சுண்டக்காய், பாவற்காய் மற்றும் அசைவ உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

1 comment:

  1. எவ்வளவு காலம் உள்மருந்து உட்கொள்ள வேண்டும் எனக் கூற முடியுமா?

    ReplyDelete

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...