Sunday, July 22, 2012

உடலைக் காக்கும் கற்பங்கள்



           கற்பம் என்பது உடலைக் காக்கும் மருந்து அல்லது உடலைக் கற்போல் மாற்றுகின்ற மருந்து எனலாம். கற்பம் உண்டவர் நீண்டநாள் வாழ்வார்.
     
      கற்பம் உண்டவர் நோயற்று இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
கற்பம் எல்லாப் பொருளினும் சிறந்தது. எல்லா முறையினும் சிறந்தது என்று சொல்லலாம். மரணத்தை எண்ணியெண்ணி அஞ்சியஞ்சி வாழவேண்டிய உலகத்தில், உடல் அழியாமல் இருக்க நூற்றெட்டுக் கற்பங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றை உண்பவரின் நரையும் திரையும் நீங்கிவிடுவதுடன்,  நீண்டநாள் வாழமுடியும் என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறியுள்ளார். மரணத்தை வென்று நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு வழியும்,முறையும் இருக்கின்ற போது மரண பயம் எதற்கு?

காலை இஞ்சி, நடுப்பகல் சுக்கு, மாலை கடுக்காய்.

சாதாரணமாக, இஞ்சியையும்கடும்பகலில் சுக்கையும், மாலையில் கடுக்காயையும் கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், நமது உடல் சுத்தியாகும். அந்த விசயத்திற்க்கு கிழவனும் குமரனாகளாம். விந்து கெட்டிப்படும்,ஆரோக்கியம் கிடைக்கும்,நோய் அனுகாது. நான்  எதையும் செய்ய மாட்டேன். வாழ்க்கை ஓடுகின்ற ஓட்டத்தில் கிடைப்பதையெல்லாம் தின்று கொண்டிருப்பேன்! என்றால், உடலைப் பாதுகாக்க யார் வருவார்?

முக்கடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியன. முதிர்ந்த எருக்கங்கட்டையை வேருடன் கொண்டுவந்து நிழலில் உலரவைத்துப் பொடி செய்துகொண்டு, ஒரு நெல்லளவு சுக்குத் தண்ணீரில் உண்டால், வாதப் பிணிகள் நீங்கிவிடும். திப்பிலித் தண்ணீரில் உண்டுவந்தால் கபநோய்கள்  விலகிவிடும். இம்முறையும் கற்பமுறைதான். இவற்றை ஒரு மண்டலம் உண்ண வேண்டும்.

கற்பங்கள் மிகவும் எளிய முறைகளாலானது. மூவகை நோய்களான வாதம்,பித்தம்,சிலேத்துமம் ஆகியவைகளை குணப்படுத்துவதுடன் உடலைக் காக்கும் அரண் போல இருப்பவை,அவற்றை
முறையாக உண்டு வந்தால், நோய் என்பதே இருக்காது. வாழ்வு செழிப்பாகும். நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் அனைவரும் கற்பம் அருந்தலாம். நீண்டநாள் வாழ்ந்து மரணத்தை வென்று நிலைத்திருந்த சித்தர்களால் கண்டறியப்பெற்ற முறைகளில் மிகச்சிறந்த முறை கற்ப முறை.


No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...