Sunday, July 22, 2012

உணவும் அதன் தன்மையும் - 1



1.      பழுங்கல் அரிசி சாதம்

உடலுக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாது, வியாதியஸ்தர்களும் சாப்பிடலாம்.

இது உடலுக்கு பலத்தை கொடுக்காது.


2.      பச்சரிசிச் சாதம்

உடலுக்கு நல்ல பலம் தரும், சிறிதளவு வாயுவை உண்டுபண்ணும்.


3.      பசுவின் பால்

பசுவின் பாலைக் காய்ச்சி சாப்பிடுவது நல்லது, இது உடலுக்கு நல்ல பலத்தை
கொடுக்கும். சுரவேகத்தை தணிக்கும்.சூலை சம்பந்த்தமான வியாதியைத்
தணிக்கும். நோயாளிகளுக்கு நல்ல ஆகாரமாகும்.

4.      எருமை பால்

எருமைப்பாலைக் காய்ச்சி சாப்பிடவேண்டும், இது மந்த புத்தியை கொடுக்கும்,தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் திமிர்வாயு என்ற ஒருவகை வியாதியை உண்டுபண்ணி நமது அறிவை மழுங்க வைக்கும் குணம் எருமைப்பாலுக்கு உண்டு.

குறிப்பு :-
தற்பொழுது பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்ற பால் எப்படிப்பட்டது என்பதற்க்கு என்ன உத்திரவாதம்?

5.      அவல்

அவலை தனியே தின்பதும் உண்டு, பல வகையான பலகாரம் செய்து தின்பதும் உண்டு. தண்ணீரில் ஊறவைத்து உண்பதால் அதிக வாயுவை உண்டுபண்ணும். நெய்,பால் சேர்த்து உண்டால் உடலுக்கு நல்ல பலத்தைக்கொடுக்கும்.

குறிப்பு:-
பசும்பாலில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது.

6.      பனைவெல்லம்

இதை காப்பி, டீயுடன் சேர்த்து சாப்பிடலாம், வாத பித்த சம்பந்தமான வியாதியைக் குணப்படுத்தும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். நீர்சுருக்குக் குணமாகும்.

7.      புளி

இதில் இரண்டு வகைப்படும், அதாவது பழைய புளி, புதுப் புளி ஆகும்.

பழைய புளி :
பைத்தியத்தை தெளியவைக்கும், உடல் உஷ்ணத்தை உண்டு பண்ணும். கண்ணோய்களைக் குணப்படுத்தும், வாதம், சூலை நோய்களைக் குணப்படுத்தும்.
புதுப் புளி :
வாலிப வயதிலேயே நரை,திரையை உண்டு பண்ணும், உடலை வளர்த்து பெருக்க வைக்கும். புத்தியை மந்தப்படுத்தும்.தாதுவின் பலத்தைக்குறைக்கும்.
சிறிது காலம் வைத்திருந்து பழைய புளி ஆனவுடன் பயன்படுத்துவது நல்லது.

8.      கொத்துமல்லி

இதை தனியா என்றும் அழைப்பார்கள். குழம்பு, சாம்பாருடன் சேர்ப்பார்கள். விக்கலை நிறுத்திவிடும்.அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஏப்பத்தை நிறுத்திவிடும். பைத்தியத்தை தெளியச்செய்யும், தாதுவை விருத்தி செய்யும். உடலில் இரணம் இருந்தால் அதை ஆற்றிவிடும்.

9.       நெய்

இது உடல் உஷ்ணத்தை தணிக்கும், பித்த சம்பந்த்தமான வியாதியை குணப்படுத்தும், கபத்தை உடைக்கும், சொரி, சிரங்குகள் குணமாகும், குடல் சம்பந்தமான எல்லா வியாதியையும் குணப்படுத்தும். மலத்தை ஒழுங்காக வெளியேற்றிவிடும். கண் பார்வை அளிக்கும், கண் எரிச்சல் மாறும், தேகத்தில் புதிய தேஜஸ் உண்டாகும். முகத்தில் அழகு கூடும்.

குறிப்பு :-
சாதத்துடன் துவரம்பருப்பும், பசுவின் நெய்யும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல பலம் ஏறும்.


10.  கோதுமை
உடலுக்கு நல்ல பலத்தை தரும், இரத்தத்தை விருத்தி செய்யும், தாதுவிருத்தி ஏற்படும்.

                                          விரைவில் அடுத்து வரும் ..............


No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...