Saturday, February 23, 2013

பாத பித்தவெடிப்புக்கான தீர்வு

பெண்களுக்கு பாதிப்பையும், கவலையையும் தருவது பாத வெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு. இவை ஒரு வகையான பூஞ்சை காளான்களால் வருகிற பிரச்சினையாகும். தோல் இறுகி கடினமாகி வழவழப்பினை இழந்து வெடித்துப் பிளந்து பார்ப்பதற்கே அருவெறுப்பினை தரும். இந்த பிரச்சினை அநேகமாக பத்தில் ஐந்து பெண்களுக்காவது இருக்கிறது.

இவற்றிற்கு தற்போதைய நவீன மருத்துவம் நிறைய தீர்வுகளை அளித்தாலும், அவை செலவு பிடிப்பதாகவும், முழுமையான தீர்வினை தருவதாகவும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த பிரச்சினைக்கு தேரையர் எளிமையான இரண்டு தீர்வினை நல்கியிருக்கிறார். அதனையே இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.

தனது தேரையர் வாகடம் என்னும் நூலில் தேரையர் இந்த முறைகளை அருளியிருக்கிறார்.

"உப்பு மண்புழுங் கரிசியூ மத்தவித் திந்துப்புத் தயிரொ
டெருக்கம்பால் ஒக்க விரைப்பன விற்பா தப்பிளப் படங்கப்பூச
நிலைவிற் றாமரை யாங்காலே யறுத்துப் போடும் வேரோடே."

உப்பு மண்”, “புழுங்கலரிசி”, “ஊமத்தை விதை”, “இந்துப்புஇவை நான்கினையும் சம அளவில் எடுத்து, தயிர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்தக் கலவையில் எருக்கம் பால் விட்டரைத்துக் கால்களில் அப்பி வைத்தால் கால் வெடிப்புகள் அடியோடு நீங்கி விடும் என்கிறார். மேலும் பாதம் தாமரைப் பூப்போல் ஆகுமாம்.

இதே பிரச்சினைக்கு மற்றொரு தீர்வாக பின் வரும் பாடலையும் தந்திருக்கிறார் தேரையர்.

"காத்துக் கஞ்சிநீர்காலசா தத்தினடுக்
கொண் ணெறித்தி ரிக்குதென
நீற்றுப் பாலநெய்யில்காலிட வல்லீரெல்
சேத்துத் தாமரை செய்யிதழொக்குமே."

சூடான வடிகஞ்சியில் காலை வைத்தும், சூடான அன்னத்தைச் சுடுகஞ்சி விட்டு அரைத்துக் அத்துடன் கற் சுண்ணமும் கலந்து சூடாகக் கால்வெடிப்பின் மேல் பூசி வந்தாலும் பாத வெடிப்பு நீங்கி, பாதம் தாமரை இதழைப் போல ஆகுமென்கிறார்.

சிறு நீரகக்கல் கறைய

"ஏலரிசியும் தேங்காய்ப்பூவும் நெரிஞ்சிவேற் மாவி
லங்கம் வேற் சிறு பூனை வேற்றிவை மூணும்
அரைத்துக் தண்ணி விட்டு சிறந்து காச்சி
இருவேளை ஆறுநாட் கொடப்பா கல்லுவீழும்".

-
அகத்தியர் நயன விதி -

ஏலரிசி - 25 கிராம்
தேங்காய்ப்பூ - 25 கிராம்
நெரிஞ்சி வேர் - 25 கிராம்
மாவிலங்கம் வேர் - 25 கிராம்
சிறு பூனை வேர் - 25 கிராம்

இவை அனைத்தையும் எடுத்து ஒரு புதுப் பானையில் போட்டு பத்தில் ஒருபங்காகக் காய்ச்சி அதாவது ஒரு லீட்டர் தண்ணீர் விட்டு நூறு மில்லி லீட்டராகக் காச்சி தினமும் காலை மாலை என இரு வேளையாக ஆறுநாள் குடிக்கக் கொடுத்தால் சிறுநீர் கழியும் பொது கல்லானது சிறுநீருடன் வெளியில் வந்து விடுமாம்.

இந்த மருந்து குடிக்க எந்தப் பத்தியமும் சொல்லப் படவில்லை.>

சொறி சிரங்குக்கு மேல்பூச்சு



"நோயது சிரங்கு சொறி கரப்பான் ஏது
நுவலவொணாது ஆறாபுண்புரைகள் ஏது
நோயேது இன்னமும் ஒரு சேதி கேளு
நுணுக்கமாம் தேங்காயை கருகச்சுட்டு
கலங்காமல் அதில் பாதி மிளகும் சேர்த்து
நோக்கமாய் அரைத்துஅதை வழித்துக் கொண்டு
நோயேது மேல் எங்கும் மூனால் பூசு பூசே
நேர்மையுடன் சாயரட்சை வெந்நீர் வாரே"

-
போகர் வைத்தியம் 700 -


தேங்காயை கருகிப் போகும் அளவு சுட்டு அந்த தேங்காயின் அளவில் பாதி மிளகு சேர்த்து நன்றாக அரைத்து நோய் ஏற்பட்ட இடங்களில் பூசி பகல் முழுதும் விட்டு பின்னர் மாலையில் வெந்நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு மூன்றுநாள் தொடர்ந்து செய்தால் சொறி , சிரங்கு, கரப்பான் போன்ற நோய்களும், அதே போல ஆறாமல் இருக்கும் மற்ற புண்கள் கூட ஆறிவிடும் என்கிறார் போகர்.

இவை தவிர போகரின் இந்த போகர்700” நூலில் பல எண்ணை வகைகள், தைல முறைகள், சூரணம், உண்டை, மேற்பூச்சு வகைகள், செந்துரவகைகள், பற்பங்கள், மாத்திரைகள், வசிய முறைகள், அஞ்சனங்கள், மை வகைகள், கியாழங்கள் என பல அரிய தகவல்களை சொல்லியிருக்கிறார்.



Friday, February 8, 2013

அழகிய கூந்தலுக்கான அதிசயம்


"அழகு நுதலின் அதிசயம் கேளாய்
களவு காயம் கலந்த அன்நீரிலே
மிளகு மஞ்சள் கடுதேல்லி வேம்பிடில்
இளகும் காயம் இறுகும் கபாலமே"


-
திருமூலர் வைத்திய சாரம் 600 -

அழகிய கூந்தலுக்கான அதிசயம் கேள், கடுக்காய் பருப்பு ,மிளகு, மஞ்சள், நெல்லி முள்ளி, வேப்பங்கொட்டை ஆகிவற்றை ஒவ்வொரு களஞ்சி அளவு சேகரித்து அதில் அளவாக பசும்பால் விட்டு நன்கரைத்து, அதனை தலையில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும் இதனால் உடல் பொலிவடையும் என்று சொல்லும் திருமூலர் தொடர்ந்து,

"
கபாலம் இறுக்கும் கண்ணும் துலக்கமாம்
அபால மந்தனி அதிவண்டு போலாகும்
விபாலத்திசை வாய்வு வேலை செய்யாது
இபாலத்தினுள்ளே எளிதாக மாத்தியே."

-
திருமூலர் வைத்திய சாரம் 600 -

இம்முறையில் தொடர்ந்து தலை முழுகிவந்தால் கபாலம் உறுதி பெறுவதுடன், கரு வண்டு போல கரிய நிற கூந்தல் கிடைக்கும், அத்துடன் வாய்வு நோய்களும், தலைவலி போன்றவையும் அண்டாது என்கிறார் திருமூலர்.


செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...