"அழகு நுதலின் அதிசயம் கேளாய்
களவு காயம் கலந்த அன்நீரிலே
மிளகு மஞ்சள் கடுதேல்லி வேம்பிடில்
இளகும் காயம் இறுகும் கபாலமே"
- திருமூலர் வைத்திய சாரம் 600 -
அழகிய கூந்தலுக்கான அதிசயம் கேள், கடுக்காய் பருப்பு ,மிளகு, மஞ்சள், நெல்லி முள்ளி, வேப்பங்கொட்டை ஆகிவற்றை ஒவ்வொரு களஞ்சி அளவு சேகரித்து அதில் அளவாக பசும்பால் விட்டு நன்கரைத்து, அதனை தலையில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும் இதனால் உடல் பொலிவடையும் என்று சொல்லும் திருமூலர் தொடர்ந்து,
"கபாலம் இறுக்கும் கண்ணும் துலக்கமாம்
அபால மந்தனி அதிவண்டு போலாகும்
விபாலத்திசை வாய்வு வேலை செய்யாது
இபாலத்தினுள்ளே எளிதாக மாத்தியே."
- திருமூலர் வைத்திய சாரம் 600 -
இம்முறையில் தொடர்ந்து தலை முழுகிவந்தால் கபாலம் உறுதி பெறுவதுடன், கரு வண்டு போல கரிய நிற கூந்தல் கிடைக்கும், அத்துடன் வாய்வு நோய்களும், தலைவலி போன்றவையும் அண்டாது என்கிறார் திருமூலர்.
Oru kalanji alavu evvalavu
ReplyDeleteManjal yentha manjaj
ReplyDeleteசாதாரணமான மஞ்சள். அதாவது ஒரு களஞ்சி என்பது கைப்பிடி அளவு ஆகும். இதை முடிந்தவரை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய், நெல்லி வற்றல், வேப்பங்கொட்டை மற்றும் மிளகு, கிழங்குமஞ்சள் இவைகளை தலா 100 கிராம் வாங்கி தாங்களே அரைத்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.
ReplyDeletethank you sir.
Delete