Monday, November 11, 2013

வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து



                                               வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படுகிறது. மெலனின்  குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம்  மிக அதிகம். சமூக ரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.



                                                               


கருவேல மரம்
வெந்தயம்



கீழாநெல்லி
                                                                           

                                
                                                *
கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்  
                                   
                                                *
கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்

                                               
இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்
                                    
                                                  *
வெந்தயப் பொடி- 80 கிராம்

                                                   
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும்.  இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

                                      
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை  உணவுக்கு  முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
                                                         
                                      
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
                             
                                      
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.
                                                     

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...