Tuesday, June 24, 2014

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளும், அதன் பின் விளைவுகளும் !!!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைச் சார்ந்து விவசாயம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறோம். இது மிகவும் ஆபத்தான செயலாகும்.


இயற்கையின் வெளிக் கட்டமைப்பில் மட்டுமல்ல உள் கட்டமைப்பிலும் (DNA) நுழைந்து செய்யும் அழிவு வேலையாகும்.

தாவரங்களின் படைப்பாக்கத்தை மனிதன் கையாள்வது ஆபத்தான ஒன்றாகும்.
வருங்காலத்தில் அனைத்துத் தாவரங்களும் மனிதனின் அனுமதியுடன்தான் இனவிருத்தி செய்யவேண்டும் என்பது உச்சகட்ட ஆபத்தாகும்.

நாடுகளை மிரட்டவும் அடிபணியச் செய்யவும்கூட இதை ஆயுதமாகப் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள்!

பயிர்கள் முளைப்பதையும் விளைவதையும் பணக்கார நாடுகளின் சோதனைக்கூடங்கள் தீர்மானிக்கும் நிலை வரும்!

போர்களில் இத்தகைய ஆய்வுக்கூடங்கள் தாக்கப்படும்!

இறுதியில் மனித இனத்தை அழிவுக்கு கொண்டுபோகும்.

இது ஒழித்துக்கட்டப்படவேண்டிய கொடூரமாகும்!

அறிவியல் இதற்குத் துணைபோகக் கூடாது!...மாறாக இயற்கைக்குப் பாதகம் இல்லாத வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்...

நமது எதிர்கால சந்ததிகள் நன்றாக வாழவேண்டும் என நாம் விரும்பினால் நாமும் இதனை எதிர்க்கவேண்டும்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...