தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் தான் டிகாஷன் காபி குடிக்கும் பழக்கம் பல ஆண்டாக இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டில் தான் காபி குடிப்போர் அதிகம். சமீப காலங்களில், பல இடங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் மாடர்ன் காபி கடைகள் பெருக ஆரம்பித்துள்ளது, சாக்லேட், காபி மோகம், தற்போதைய இளைய தலைமுறையினரிடம் அதிகமாக காணப்படுகிறது.
தினமும் அதிகளவு காபி குடித்தால் ஆபத்து என அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த ஆய்வாளர்கள், 40 ஆயிரம் பேரிடம் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுமார் 17 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகம் பேர் காபி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.
அதிகளவு காபி குடிப்பதால் உடல் சார்ந்த அளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. அதிக அளவில் காஃபின் கரு குழந்தையை பாதிப்பதோடு கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்
அதேபோல கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர். சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம்
நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கருச்சிதைவு அபாயம்
----------------------------------
சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்பினை வெளியிட்டிருந்தது கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்
குறிப்பாக காபி குடிப்பவர்களின் இதயம் எளிதில் பலவீனம் அடைந்து விடுகிறது.
இந்த ஆய்வில் மட்டும் 1000 க்கும் மேற்பட்டோர் காபி குடிக்கும் பழக்கத்தால் உயிரிழந்து உள்ளனர். 55 வயதிற்கு உட்பட்டவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு வாரத்திற்கு 28 கோப்பை காபி குடிப்பவர்களின் இதயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களில் 32 சதவீதம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவு சாக்லேட் சாப்பிடுவது, காபி குடிப்பதை தவிர்ப்பது நலம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சின்ன வயது முதல் தொடர்ந்து காபி, சாக்லெட் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களின் தூக்கம் கெட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
காபியில் உள்ள இதே காபீன் சாக்லெட்டிலும் உள்ளது. சாதாரண சாக்லெட்டில் 9 மில்லி கிராம் வரை காபீன் இருக்கிறதாம். சில உயர் ரக சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் 30 மில்லிகிராம் வரையில் காபீன் இருக்கிறதாம். இது தூக்கத்தை விரட்டி விடும்.
ஏதாவது ஒரு வேலையில் இருக்கும்போது தூக்கம் எட்டிப்பார்த்தால் டீ அல்லது காபி குடிக்கிறோம். அதில் உள்ள காபீன் என்ற ரசாயனப்பொருள் நம் முளையின் செயல்பாட்டை தூண்டி சுறுசுறுப்பாக்குகிறது.
நமது சுறுசுறுப்புக்கு காரணம் காபியல்ல, நமது மனம்!
------------------------------------------------------------------------------------
பலருக்கு காபி குடிக்காவிட்டால் பொழுதே விடியாது. அதிகாலையில் ஆவி பறக்க காபி பருகியதும்தான் உடம்புக்குள் ஒரு சுறுசுறுப்புப் பிறப்பதாக உணர்வார்கள்.
காபியில் உள்ள `காபீன்’, உடம்புக்குச் சுறுசுறுப்பு அளிப்பதாகத்தான் இதுவரை கருதப்பட்டு வந்தது.ஆனால் காபியில் உள்ள `காபீன்’ அல்ல,காபியை பற்றி மனதில் தோன்றும் எண்ணம்தான் சுறுசுறுப்புக்கு காரணம் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு கெட்ட செய்தியையும் கூறுகிறார்கள்.அதாவது,
`காபீன்’, உஷார்தன்மையை ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் படபடப்பையும், உயர் இரத்த அழுத்தத்தையும் உண்டாக்குகிறது என்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பீட்டர் ரோஜர்ஸ், வழக்கமாகக் காலையில் காபி பருகும் பழக்கம் உள்ளவர்கள், அது இல்லாமலே சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்கிறார்.
“எங்கள் ஆய்வின்படி, காபி பருகுவதால் பலன் ஏதும் இல்லை. அதனால் நாம் உஷார்தன்மை பெற்றதைப் போல உணர்ந்தாலும்,`காபீன்’ பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது. அதேநேரம் அது படபடப்பைக் கூட்டுகிறது” என்று ரோஜர்ஸ் தெரிவிக்கிறார்.
காலையில் எழுது ஒரு கப் காப்பியை குடிக்கிறீர்கள். உடனே அது உங்கள் உடலில் அட்ரினலின், கார்ட்டிசோல் எனும் இரு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கலையும் சுரக்க வைக்கிறது.
ஆதிமனிதன் சிங்கத்தை கண்டு பயப்பட்டபோது அவன் உடலில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தும் இப்போதும் நிகழ்கின்றன. உடல் மிகப்பெரும் ஓட்டம் அல்லது போருக்கு தயார் ஆகையில் நீங்கள் இது இரண்டையும் செய்யாமல் செய்தித்தாள் படிக்கிறீர்கள். உங்கள் இதயம் அதிவேகத்தில் ரத்ததை பம்ப் செய்கிறது. ஆனால் அதுக்கு எந்த பலனும் இல்லை. நீங்கள் அடுத்து மெதுவாக குளிக்க செல்கிறீர்கள்.
ஆக ஒரு சிங்கத்தை கண்டால் உருவாகும் மன அழுத்தம் ஒரு காபியை குடிப்பதால் உருவாகிறது.
அத்துடன் நிற்கிறதா? இல்லை. அடுத்து 10 மணிக்கு இன்னொரு காபி. உடல் மீண்டும் சிங்கத்தை கண்ட அதிர்ச்சியில் போருக்கு தயார் ஆகிறது. ஆனால் இப்பவும் சிங்கத்தை காணோம். நீங்கள் அலுவலகத்தில் கணினியைப் பார்த்தபடி காபி குடிக்கிறீகள்.
இப்படி ஒரு நாளுக்கு நாலைந்து தடவை உடலுக்கு சிங்கத்தை தரிசனம் செய்யும் அளவு அதிர்ச்சியை உடலுக்கு கொடுத்தால் என்ன ஆகும்?
அதிகரிக்கும் மன அழுத்தம், படபடப்பு, உயர் இரத்த அழுத்தம், விரைவில் வயது ஆவது, உடல் உறுப்புகள் தளர்வது, மாரடைப்பு என அனைத்தும் ஏற்படும். இதுபோன்ற மன அழுத்தத்தால் . முடி கொட்டும், நரைக்கும். இளவயதில் முதுமை அடைவோம்.
போதாக்குறைக்கு பெப்சி,கோக்கில் கூட இப்போது காஃபின் சேர்க்கபடுகிறது. காபி சுவை உள்ள மிட்டாய்கள், ஐஸ்க்ரீம் கூட வருகின்றன. நம் உடலுக்கு பலத்த மன அழுத்தத்தை இவை அனைத்தும் உருவாக்கும்.
காபி என்பது புத்துணர்வு அளிக்கும் பானமல்ல. அதிர்ச்சி அளிக்கும் பானம். தினம் 4 கோப்பை காப்பி குடிப்பது ஒரு அடிமைத்தனம். அதை விட்டு தொலைப்பது தான் நாம் தப்ப ஒரே வழி.
Verey nice
ReplyDelete