Tuesday, June 24, 2014

மனிதனும் பாக்டீரியாவும்….!


"பாக்டீரியா"

“பாக்டீரியாதான் இந்த உலகத்தை ஆள்கிறது, மனிதர்களாகிய நம் உடலையும் சேர்த்து ஆள்கின்றது, உண்மையில் நாம் வெறும் மனிதர்கள் அல்ல, நடமாடும் பாக்டீரியாக்களின் தொகுப்பு. 

அதுமட்டுமல்லாமல், நாம் தாங்கிச் செல்லும் பாக்டீரியாக்கள்தான் நம் உடல் நலத்திற்க்கும், மேம்பாட்டிற்க்கும் காரணம்“ இப்படியெல்லாம் நான் சொன்னா, “யோவ், எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க இப்படி? என்று என்னிடம் சண்டைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதிக்கில்லை!

ஆனால் உணமை நண்பர்களே, இதை சத்தியமாக நான் சொல்லவில்லை! ஜெரோன் ரேயஸ் (Jeroen Raes) அப்படீங்கிற ஒரு ஜெர்மனி நாட்டு ஆய்வாளர், பிரபல அறிவியல் வார இதழ் (நேச்சர்) Nature- ல் வெளியான தன் சமீபத்திய ஆய்வறிக்கையை ஆதாரமாக வைத்துக்கொண்டு சொல்கிறார்.

மனிதக் குடல் ஒரு பாக்டீரியா காப்பகம்!

நம்மளோட குடல் உண்மையில ஒரு பாக்டீரியாக் காப்பகம்தான்னு உங்களில் சில/பல பேருக்குத் தெரிந்திருக்கும். அதாவது, நமது குடலில் பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்பதும், ஆனா அதனால் நமக்கு நன்மைதானே தவிர கெடுதல் எதுவும் இல்லை என்பதுவும் முன்பே நமக்கு தெரிந்த விசயம் என்றாலும், மனிதக் குடலின் உள்ளிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றிய முழுமையான விவரம் இதுவரை (எந்த) விஞ்ஞானிக்கும் கூட சரியாத் தெரியாது!

ஆனால், சமீபத்திய ஒரு மரபணு ஆராய்ச்சியில், மனிதர்களின் உடலில் இருக்கின்ற வேற்று உயிரின மரபணுக்கள் எத்தனை என்று கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். அந்த ஆய்வு முடிவில் தான், நமது உணவுக்குழாயில் கிட்டத்தட்ட 170 விதமான பாக்டீரியா இனங்கள் வாழுகின்றன (இதுவரைக்கும் தெரியாத) ஒரு பெரிய அறிவியல் உண்மையை கண்டுபிடித்திருக்கின்றார்கள்!

ஆக 170 பாக்டீரியா இனங்கள் நமது குடலுக்குள் குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கவும் மறக்கவும் முடியாது என சொல்லுகின்றது இந்த ஆய்வறிக்கை!

நமது உடலில் இருக்கின்ற கிட்டதட்ட 99% மரபணுக்கள் எல்லாம் நம்ம குடலுக்குள்ளே (வாடகை கூட கொடுக்காமல் ஓசியில்) தங்கியிருக்கின்ற பாக்டீரியாவினுடையதுதான் என்பது தெளிவாகின்றது.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...