Tuesday, June 24, 2014

டி.என்.ஏ ( D N A )


உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் டி.என்.ஏ என்கிற மூல பொருட்களை கொண்டே உருவாக்கப்படுகின்றன. 

அனைத்து உயிரினங்களின் உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏவை தான் சார்ந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த டி.என்.ஏ பற்றிய சில தகவல்கள் :

1. டி.என்.ஏ என்பதன் முழுபெயர் டிஆக்சிரைபோ நுக்ளிக் ஆசிட் (Deoxyribonucleic acid) தமிழில் “ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்” எனப் பொருள் தரும். உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் வருவதற்கு டி.என்.ஏவே காரணமாகும்.

2. இதன் வடிவம் ஓர் நீண்ட ஏணியை முறுக்கியது போன்று இருக்கும். இரு செங்குத்தான நீண்ட புரியிழைகள், அமினோ அமில இணைகளான தொடர் படிகளால் இணைக்கப் படுகின்றன, அடினீன் (adenine) குவானீன் (guanine) தைமீன் (thymine) சைற்றோசின் (cytosine) போன்ற அமினோ அமிலங்களையும் சுகர் மற்றும் ஃபொஸ்பேட் அணுக்களையும் கொண்டே உருவாக்கபட்டுள்ளன.

3. இந்த டி.என்.ஏ வடிவத்தை ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃப்ரன்சிஸ் க்ரிக் 1953 - ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். 

4. மனித உடலிலுள்ள டி.என்.ஏகளின் எண்ணிக்கையும் அதன் செயல்பாடுகளையும், மரபியல் தகவல்ளையும் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டமே மனித மரபகராதித் திட்டம் (Human genome project).

5. இந்த திட்டம் 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2003ம் ஆண்டு நிறைவடைந்தது.

6. நமது உடலிலுள்ள டி.என்.ஏகளை மொத்தமாக மரபகராதி(Genome) என்பார்கள். மரபகராதி என்பது டி.என்.எயில் குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப் பற்றிய அனைத்த மரபியல் தகவல்ளையும் குறிக்கிறது.

7. நமது மரபகராதியில் மொத்தம் 3,000,000,000 டி.என்.ஏகள் உள்ளன.

8. உண்மையென்ன வென்றால் நம்முடைய டி.என்.ஏ போலவேதான் நம் பக்கத்திலுள்ள அறிமுகமில்லாத நபரின் டி.என்.ஏ அமைப்பும் 99.9 சதவிகிதம் ஒத்து இருக்கும் . 0.01 சதவீகிதத்தில்தான் வேறுபாடு.

9. சமீபத்திய ஆராய்ச்சியின்படி நவீன யுக மனிதன் ஆதிமனிதனாகிய நியண்டர்தால் மனிதனின் டி.என்.ஏ களில் 1 லிருந்து 4 சதவிகிதம் வரை பெற்றுள்ளான். 

ஆனால் மனிதக் குரங்குடன் 96 லிருந்து 99 சதவிகிதம் வரை ஒத்துள்ளது.

இதை வைத்துத்தான் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என டார்வின் (தவறாக) சொன்னார்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...