உயிரியல் அறிஞர்கள் பலரும், “செல்” ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்ட போது, ( தற்பொழுது நாம் பேச பயன்படுத்தும் செல் அல்ல, உயிரியல் செல் ) மனிதன், விலங்கு மட்டுமல்லாமல், செடி, கொடி, தாவரங்கள் அனைத்திலும் இந்த செல் இருக்கும் உண்மையைக் கண்டுபிடித்தார்கள்.
தொடக்க காலகட்டங்களில், இந்த செல் பற்றிய ஆய்வு, செல் சுவர் அளவிலேதான் இருந்து வந்தது. செல் சுவரைத் தாண்டி ஆய்வு செய்வதற்குப் போதுமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை.
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், மின்னணு நுண்நோக்கி (Electron Microscope) கண்டு பிடிக்கப்பட்டப் பின்பு, அதன் துணையால் 1831ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரவ்ன் என்ற விஞ்ஞானி, செல்லின் மையப் பகுதியல் உருண்டை வடிவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதற்கு “நியூக்ளியஸ்” (Nucleus) என பெயரிட்டார்.
அதனைத் தொடர்ந்து, உயிரினச் செல் சுவரை அடுத்து ஒரு வகையான கெட்டிப் பொருள் இருப்பது 1846 ம் ஆண்டு வான்மோல் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலகட்டங்களில், அது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது. பின்னாளில் அதற்கு “புரோட்டோபிளாசம்” என்ற பெயர் நிலை பெற்றது.
மேலும், பல ஆய்வுகளை உயிரியல் விஞ்ஞானிகள் மேற்கொண்ட போது, திரவப் பொருள் இருப்தையும் அறிய முடிந்தது. அதற்கு “சைட்டோப்பிளாசம்” எனவும் பெயர் சூட்டப்பட்டது.
1890 - ம் ஆண்டுவாக்கில் இந்த சைட்டோப் பிளாசத்திற்குள் நுண்ணிய திடப்பொருள் மிதந்து கொண்டிருப்பதை அல்ட்மான் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார்.
அதனை இன்று “மைட்டோ காண்ட்ரியா” (Mitochondria) என்று அழைக்கிறோம். அதே ஆண்டில்தான் வால்டேயர் எனும் விஞ்ஞானி உட்கருவினுள் (Nucleus) “குரோமோசம்கள்” இருப்பதைக் கண்டுபிடித்தார்.
விஞ்ஞானிகளின் ஆய்வுப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்ததன் பயனாக, 1953 - ம் ஆண்டு வாட்சன், க்ரிக் என்ற இரு உயிரியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து, குரோமோசம்களுக்குள் மரபணுக் கூறான “ டி.என்.ஏ.” (D.N.A) இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இந்த கண்டு பிடிப்பு, உயிரியல் ஆய்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. மேலும் அது திகிலூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது.
மனிதப் பரம்பரைச் செய்திகள் அனைத்தும் அதில், அதாவது அந்த டி.என்.ஏ (டிஆக்ஸிரிபோ நியூக்ளியிக் அமிலம்) – வில் உள்ளடக்கப்பட்டிருந்ததை அறியமுடிந்தது.
மேலும் ஆய்வினை மேற்கொண்ட போது முடிவில்லாத சங்கிலித் தொடராக அதன் செய்தி தொடர் அமைந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.
மரபணுக் கூறான, டி.என்.ஏ. (D.N.A) வில், பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளில் 3 சதவீத தகவல்கள்தான் இது வரை அறியப்பட்டுள்ளன.
அந்த தகவல்கள் மட்டும் பல லட்சம் பக்கங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கின்றன என்றால், அறியப்படாத 97 சதவீத தகவல்கள் எத்தனை கோடிப் பக்கங்களை நிரப்பக் கூடியதாக இருக்கும் என்பது அறிவியல் மேதைகளுக்கே தலை சுற்றுவதாக விளங்குகிறது.
எனவேதான், 1958 - ம் ஆண்டு கோட்டர்ட் என்பவர் செல்லடக்கச் செய்திகள் அனைத்தையும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால், உயிரினத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்வோம் என்ற அறிவிப்பைச் செய்தார்.
இதன் அடிப்படையில்தான் மனிதன் தொடர் ஆராய்சியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளான், ஆனால் இந்திய மகரிஷிகளும், ஞானிகளும், யோகிகளும் தன்னை அறியும் உபாயம் அறிந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னறே இதனை மனதின் வாயிலாக அறிந்து கொண்டனர். அதனை மக்களுக்கு பலவகைகளில் சொல்லியும் உள்ளனர்.
இந்த மனமானது டி.என்.ஏ - வின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது. நமது டி.என்.ஏ வில் ஏற்கனவே பதியப்பட்ட எண்ணப்பதிவுகளின் வெளிப்பாடே தற்போதைய நமது செயல்கள் அனைத்துமே.
இந்த எண்ணப்பதிவுகள் முற்பிறவிகளில் நமது பிறப்பின் அடிப்படையில் அமைகின்றது.
உதாரணமாக நாம் குரங்காகவோ, நாயாகவோ, மற்ற எந்த உயிரின்ங்களின் வடிவத்தில் வாழ்ந்தோமோ அதன் குணாதிசயங்கள் நம்மிடம் இந்த பிறவியிலும் காணப்படுகின்றது என்பதனை கண்கூடாக காண்கின்றோம்.
(உதாரணம் – குரங்குகளைப்போல மனதாலும், உடலாலும் தாவுதல், நாய்களைப்போல மற்றவர்களைப்பார்த்து குறைத்தல். பொதுவாக அவைகளுக்குள்ள கோபம்,பயம்,பதட்டம் போன்ற அனைத்து எண்ணங்களும் நம்மிடையே காணப்படுகின்றன.)
ஆனால் மனிதனுக்கு தேவையான குணாதிசயங்களான கருணை, பணிவு, அன்பு, ஆனந்தம் போன்ற குணநலன்கள் நம்மிடையே குறைவாக காணப்படுகின்றன.
இது போன்ற நல்ல குணங்களை வளர்க்கவும், தீய குணங்களை தவிர்க்கவும்தான் நமக்கு ஆறாவது அறிவு தரப்பட்டுள்ளது. அந்த ஆறாவது அறிவை வளர்பதின் வாயிலாக நாம் ஒரு முன்னேறிய மனிதனாக, ஞானியாக வாழமுடியும்.
இதற்கு மனம் என்னும் பழுதுப்பட்ட கருவியை சரிசெய்யும் இயந்திரத்தை இயக்கவேண்டும்.
அதாவது நாம் நமது டி.என்.ஏ – வில் உள்ள முற்பதிவுகளை அழிக்க வேண்டும், புதியதாக நல்ல ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பதிய வேண்டும்.
No comments:
Post a Comment