மனிதனின் மனமே எண்ணங்களின் படைப்பாளி, எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம்.
மனமானது உள்ளிருந்தபடி செயல்படுவதால் தான் உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது.
மனம் என்ற அகக்கருவியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம், என்று விரித்து நான்காவும் சொல்லலாம். மனம் என்று ஒரு பொதுச் சொல்லாலும் அழைக்கலாம்.
மனத்தை ஒரு பொருளாகக் கொள்ளாமல் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்காக விரித்து அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. மனம் செயல்படும் விதத்திலிருந்து இப்படி நால்வகை பிரிவுகளை அறிய முடிகிறது.
மேலை நாட்டு விஞ்ஞானமும், உளவியலும் மனத்தை இப்படி பாகுபடுத்தி அறிய முற்படுவதில்லை. இந்திய சித்தர்களிடம் மட்டுமே மனத்தை பற்றி விரிவான விளக்கங்கள் காணப்படுகின்றன.
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே. – இடைக்காட்டு சித்தர்.
இந்த மனமும், அதன் இயக்கங்களையும் பற்றிய விபரங்களை யோகிகளும், ஞானிகளும் மட்டுமே அறிவார்கள், சாதாரண மனிதர்கள் இந்த மனத்தைப் பற்றிய தெளிவு இல்லாத காரணத்தால்தான் இன்றைய வாழ்க்கைமுறை மிகவும் மோசமாக உள்ளது.
மனம் கண்ணுக்கு தெரியக்கூடிய திடப்பொருள் அல்ல. அதன் இருப்பிடத்தை மனித உடலில் எங்கேயும் பார்க்க இயலாது, மனதை கடிவாளம் போட்டு அடக்க முடியாது.
ஆனால் இந்த மனமானது ஆறாவது புலன் ஆகும், மற்ற (வாய், மெய், கண், காது, மூக்கு) ஐம்புலன்களைப்போன்று இதற்கு உருவம் இல்லை.
மனம் ஐம்புலன்களின் உதவியில்லாமலேயே அவைகளால் செய்யக்கூடிய அனைத்தையும் இந்த மனத்தினால் நேரடியாக பார்க்கவும், கேட்கவும், முகரவும்,சுவைக்கவும்,ஸ்பரிசிக்கவும் முடியும்.
நம்முடைய டி.என்.ஏ போலவே தான் நம் பக்கத்திலுள்ள அறிமுகமில்லாத நபரின் டி.என்.ஏ அமைப்பும் 99.9 சதவிகிதம் ஒத்து இருக்கும் . 0.01 சதவீகிதத்தில் மட்டும் தான் வேறுபாடு,
விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஆன்மீகத்தில் மகான்கள் சொல்வது போல பார்த்தாலும் நாமும் மற்றவர்களும் ஒன்றே,
மரம்,செடி கொடி, பறவைகள், விலங்குகள், நீரில் வாழ்வன, ஊர்வன என எல்லா உயிர்களும் ஒன்றே. ஏனெனில் டி.என் ஏ அமைப்பு அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுபோலவே உள்ளது. டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.
மேலும் உயிரினங்களின் பாரம்பரிய பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் (offspring) வருவதற்கு டி.என்.ஏ - வே காரணமாகும்.
இந்த டி.என்.ஏ – வில் ஏற்கனவே உள்ள பதிவுகள் தான் தற்போழுதும் நம்மிடம் தோன்றும் எண்ணங்களின் (நல்லஅல்லது தீய எண்ணங்கள்) வெளிப்பாடாகின்றது. இதைப்பொறுத்தே நமக்கு சந்தோஷமும், துக்கமும் அமைகின்றது.
இதனால் தான் நமக்கு எதிரே உள்ளவர்களைப்பற்றி ஏற்படும் தவறான,கோபமான எதிர்மறையான எண்ணங்களின் கூட்டுச்சேர்க்கை கண்ணுக்கு தெரியாமல் (செல்போன் அலைவரிசை போன்று) நம் எதிரே உள்ளவர்களுக்கு செலுத்தப்படுவதால் அவர்களுக்கு உள்ளே உள்ள டி.என்.ஏ இதனை உணர்ந்து கொள்கின்றது.
நமது எதிர்மறை எண்ணத்தின் குணாதிசயங்களை அவரது டி.என்.ஏ உணர்ந்து கொண்டு அவரையும் நம் மீது நம்மைப்பற்றி தவறாகவோ, கோபப்படவோ, அல்லது வெறுப்படையச்செய்யவோ செய்கின்றது.
இதுவே நாம் நம் எதிரே உள்ளவர்களையோ அல்லது நாய், பூனை போன்ற உயிரினங்களின் மீதோ அன்பை செலுத்தும் பொழுது (இயற்கையின் விதிப்படி - ஒன்றை விதைத்தால் பல மடங்கு நமக்கு இயற்கை திருப்பித்தரும் உதாரணமாக, ஒரு நெல்மணி விதைக்கப்பட்டால் பல நெல்மணிகள் கிடைப்பது போன்று) அது பல மடங்காக நமக்கு திரும்பக்கிடைக்கின்றது.
எனவே இந்த மனமானது நமது செல்களின் ஒவ்வொறு டி.என்.ஏ – விலும் கண்ணுக்கு தெரியாமல் பரவியுள்ளதால், நமது மனங்களில் ஏற்படும் தீய அல்லது நல்ல குணாதிசயங்களில் வாயிலாக நம்மை நாம் வெளிப்படுத்தும் வாழ்க்கை முறை அமைகின்றது.
இதனைத்தான் நம்து பெரியவர்கள் அன்றே “மனம் போல வாழ்வு” என தெளிந்த அறிவுடன் நமக்கு சொல்லிவிட்டனர்.
‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந்தானே!’ – திருமூலர்.
ஆகவே நாமும் இனி நல்ல குணாதிசயங்களை வளர்ப்போம், நல்ல மனதுடன் வளமாய் வாழ்வோம் சரியா? நண்பர்களே!.

No comments:
Post a Comment