Monday, October 27, 2014

நீடூழி வாழ்வோம்

                                    என்றும் இளமை உணர்வோடு இருக்கும் இனிய நண்பர்களே! நீடூழி வாழ வேண்டுமா?. அட! போங்க சார்! இந்தக் கடுமையான வாழ்கையை இன்னும் நிறைய  நாட்களுக்கு வாழ வேண்டுமா, ஆளை விடுங்க சாமி என்கிறீர்களா?  

அன்பு நண்பர்களே ! மண்ணீரலைப் பாதுகாத்து  இளமையாக வாழும் போது, நல்ல உடல் நலத்தால் நமக்கு உள்ளே பிரச்சனைகள் குறைவாகவும், தெளிந்த அறிவின் பயனாய் நமக்கு வெளியே பிரச்சனைகளைத்  தரமாக கையாள்வதாலும்,  வாழ்கை என்பது சுலபமான ஒன்றாக அமையும் ஆதலால், நீடூழி வாழ்தல் என்பது சுமையாக இல்லாமல் சுகமானதாகவே இருக்கும்

 சரி, நாம் நீடூழி வாழ ஒரு அற்புத விருக்க்ஷம் ஒன்று இருக்கிறது

இந்த விருக்சஷம், நம் உடலில் கல்லீரலாக இருக்கிறது. வான் பொழிந்து பூமி தனிய வேண்டுமாயின், மண்ணை வளமாக்கி மரம் செழிக்க வேண்டும். அது போல, வான் சக்தி (Cosmic) உட் புகுந்து உடல் தனிய வேண்டுமாயின் மண்ணீரலை வளமாக்கி, கல்லீரலை செழிப்படைய செய்ய வேண்டும். அது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
            

                                    
கல்லீரல் என்பதை ஆங்கிலத்தில் லிவர் (Liver) என்று அழைப்பதன் அர்த்தமே அது நம்மை வாழ வைக்கிறது என்பதால்தான். ஆகவே, கல்லீரல்தான் நம் உயிர் என்பதை எப்பொழுதும் மறந்து விட கூடாது.  மண்ணீரல்  நமது உணவில் இருக்கும் மாவுச் சத்தைச் செரித்து, கிரகித்து கனிசமான சக்தியை கல்லீரலுக்கு அளிக்கிறது.  

கல்லீரலானது உணவில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்தைச் செரித்து உடலுக்கு வலுவையும் உறுதியையும் அளிக்கிறது. கல்லீரல் சிறப்பாக செயல்பட வேண்டுமாயின், வயிற்றில் பசி வெப்பம் தனிய வேண்டும்; மண்ணீரல் செரிமானம் முழுமை பெற்றிருக்க வேண்டும்; முழுமையான  (உயிர்ச் சத்துக்களை உள்ளடக்கிய)   உணவினை  எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும், கால்சியம் தாதுச் சத்தை எடுத்து கொள்ள வேண்டும்.  

அதிக அமிலத் தூண்டலைத் தரும் மசாலா உணவுகளையோ (பிரியாணி, நூடுல்ஸ், பலவிதமான துரித உணவுகள் ஆகியன) அல்லது அமிலத் தன்மை உள்ள உணவுகளையோ (பச்சை மிளகாய், குளிர் பானங்கள், காபி, மது பானங்கள், சிக்கன் 65, மஞ்சூரியன் வகைகள், வெங்காயச் சட்னி, பதப்படுத்திய ஊறுகாய்    ஆகியன), இரசயன மருந்துகள் ஆகியன  எடுத்துக் கொண்டால் வயிற்றில்  வெப்பம் அதிகமாகும்.  

இந்த அதிக வெப்பத்தில் கல்லீரல் சுரக்கும் பித்த நொதிகள் கரைந்து வீணாகிவிடும். இப்படி வீணாவதால் மூளையானது உணவினை செரிக்கக் கல்லீரலை மீண்டும் மீண்டும் தூண்டி பித்த நீரை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. காலப்போக்கில் கல்லீரல் சோர்வடைகிறது. அதிக பித்தம் சுரக்க அதிக கால்சியம் தேவைப்படுவதால், எலும்பு கரைகிறது. கரைதல் ஆயுளைக் குறைக்கிறது. காலப்போக்கில் கல்லீரல் சோர்வடைகிறது. அதிகப் பித்தச் சுரப்பானது உஷ்ண வியாதிக் கிருமிகள் (மஞ்சள் காமாலை, டைபாய்டு, அல்சர் முதலியன) பெருக அற்புதக் களமாகிறது. அதிகப்படியான பித்தத்தை சிறுநீரகங்கள் வெளியேற்றத் தவறும் போது பித்தப்பை கற்கள் உருவாகின்றன. நரை ஏற்படுகின்றன.
     

                                    உடல் உஷ்ணத்தால் நமது உள் உறுப்புகள்  இரணவீக்கம் (Inflamation) ஆகின்றன. அவற்றுள், வயிற்று இரணம் அல்சரையும்; சிறு குடல் இரணம் அம்மையையும்; பெருங்குடல் இரணம் மூலத்தையும்;  இருதய இரணம் இரத்த அழுத்தம் (B.P.) மற்றும் மாரடைப்பையும்; நுரையீரல் இரணம் நெஞ்செரிச்சல் மற்றும் சளியையும்; மூளை இரணம் மன உளைச்சலையும்; கணைய இரணம் நீரழிவு நோயையும்; சிறுநீரக இரணம் சிறுநீரக செயலிழப்பையும்; சிறுநீர்பை இரணம் சிறுநீரகத் தொற்றையும்; கருப்பை இரணம் எரிச்சலான மாதவிடாய், அதிக உதிரப் போக்கு மற்றும்  கருப்பை புற்று, ஆகியவற்றையும்  உண்டாக்குகின்றன. இதில் எந்த உள் உறுப்பு உங்கள் மரபுக் கூறுப்படி பலவீணமாக இருக்கிறதோ அது முதலில் இரணப்படுகிறது.

                                    நண்பர்களே! கல்லீரலைப்   பாதுகாக்க புளிப்பையும் உப்பையும் கண்டிப்பாக குறைத்துக் கொள்ள வேண்டும். கசப்பையும் துவர்ப்பையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். மிளகு, வெந்தையம், கூழ் வகைகள், பழச் சாறுகள், வெல்லம், உலர்ந்த திராட்சை, ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, கடலை மிட்டாய், நெல்லிக்காய்,  நார்த்தங்காய், கீழாநெல்லி ஆகியன கல்லீரலை  பாதுகாக்கும். நொறுக்கு தீணிகள், எண்ணையில் பொரித்து எடுத்த உணவுகள், துரித உணவுகள், பனிக்கூழ் (Ice cream), குளிர் பானங்கள், பச்சை மிளகாய், பதப்படுத்திய உணவுகள், இரசாயிணம் கலந்த உணவுகள் ஆகியன கல்லீரல் சக்தியை  கெடுக்கும்.

                                    என்ன  நண்பர்களே! இப்படி எல்லாம் வாயைக் கட்டி வயிற்றைக்  கட்டி ஆயுளை நீட்டிக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது எனக்குப்  புரிகிறது.    

நண்பர்களே! கல்லீரல் சுகம் என்ற தன்மைக்கு கிடைக்கும் பரிசுகள்  ஏராளம். எவரோடும் இணக்கமாகப் பழகுவது,  இனிமையாகப் பேசுவது, நோயற்று இருப்பது, புத்தி நிதானம், நீள் ஆயுள், எப்போதும் அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக, அழகாக, நிம்மதியாக வாழ்வது ஆகிய பரிசுகள் கிடைக்கும்.   

 என்ன  நண்பர்களே!  கல்லீரலைப் பாதுகாக்க முடிவு செய்துவிட்டீர்கள்தானே?
         
                        சரி  நண்பர்களே! நீள் ஆயுளின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் கல்லீரலைப் பாதுகாக்க தேவைப்படும் சத்தும் சக்தியும் பற்றி இனி பார்ப்போம்.

சமச்சீர் புரதம்
பி-உயிர்ச் சத்துக்கள்
கால்சிய தாதுச் சத்து
கல்லீரல் செரிமாண நொதிகளை உருவாக்கத் தேவையான எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது.
கல்லீரல் செரிமாண நொதிகளை தரமாக வேலை வாங்க பி-உயிர்ச் சத்துக்கள் (B-vitamins) அவசியம் தேவைப்படுகிறது.
கால்சிய தாது கல்லீரலின் பித்தம் தரமாக உருவாக தேவைப்படுகிறது.. 
ஒமேகா-3 கொழுப்பு
நீரில் கரையும் நார்ச் சத்து
காய்-கனிகளின் செரிவு
 தரமான பித்த நீர் சுரக்க  ஒமேகா-3 கொழுப்பு மிக அவசியம். அதிகப்படியான பித்தமும், கெட்டக் கொழுப்பும் சேர்ந்துதான் பித்தக் கல். நல்லக் கொழுப்பாகிய ஒமேகா-3 எடுத்துக் கொள்ளும் போது கெட்டக் கொழுப்பு நீக்கப்படுவதால், பித்தக் கல் பிரச்சனையை தவிர்க்க முடியும்.
 மலச்சிக்கல் காரணமாக உடல் உஷ்ணமாகி, கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. நீரில் கரையக்கூடிய இயற்கையான நார்ச் சத்தானது மலச்சிக்கலை போக்கி,உடல் உஷ்ணத்தை தனித்து கல்லீரலை சிறப்பாக செயல்பட வைக்கிறது.    
உணவின் கொழுப்பு செரிக்க அதன் தன்மைக்கு ஏற்றவாறு சில உபகாரணிகள் (Co-factors)  தேவைப்படுகின்றன. அவை எவை என குறிப்பறிந்து எடுத்துக் கொள்ள முடியாது ஆகையால், உபகாரணிகள் பல  கொண்டுள்ள காய்-கனிச் செரிவு (Concentrated Fruits and Vegetables) உதவும்.

 கல்லீரலுக்கு மலர் மருந்து
             
நிலைப்பாடு
மலர் மருந்து
கோபம், எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கல்லீரல் அழற்சி
செர்ரி பிளம்(Cherry Plum)
தூக்கமின்மையால் உண்டாகும் கல்லீரல் சேதாரம்
வைட் செஸ்நட் (White Chestnut)
குடிப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரல்
வால்நட் (Walnut)
பித்தக் கல் வராமல் தடுக்கவும், பித்தக் கல்லைக் கரைக்கவும்
ராக் ரோஸ் (Rock Rose)
மன அழுத்தத்தால் உண்டான கல்லீரல் அழற்சி நீங்க
அக்ரிமோனி (Agrimony)
                                                   கல்லீரலை குளிர்வித்து வாழவைத்தால்,                 
                                         கல்லீரல் நம்மை நீடூழி வாழவைக்கும்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...