Sunday, March 8, 2015

அப்பெண்டிசைடிஸ் - குடல் வால் நோய்



Appendicitis



நாம எல்லாரும் இதை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். தீராத வயிறு வலி என்று மருத்துவமனை சென்று அப்பெண்டிசைடிஸ் என்று சொல்லி ஆப்பரேசன் செய்து கொண்டவர்கள் அதிகம். அப்பெண்டிசைடிஸ் பிரச்சனையினால் உயிரையே விட்டவர்களும் உண்டு.  

சரி.... அதென்ன அப்பெண்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் நோய்...? உயிரே போகின்ற அளவுக்கு அது என்ன அப்படி ஒரு முக்கியமான விஷயம்? தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய வயிற்றில் சிறு குடலும் பெருங்குடலும் இணைகின்ற இடத்தில ஒரு சிறிய வால் போன்று நீட்டிக்கொண்டு இருப்பதுதான் குடல் வால் என்று சொல்லக்கூடிய ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற அப்பெண்டிக்ஸ் (appendix).

குடலில் இருந்து வால் போன்று வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதினால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம். இது நம்முடைய உடலில் இருக்கின்ற ஆனால் நாம் பயன்படுத்தாமல்  இருக்கின்ற ஒரு உறுப்பு.

நாம் எல்லோரும் அடிக்கடி சொல்கின்ற அல்லது நம்மிடையே பேசப்படுகின்ற ஒரு விஷயம், எந்த ஒரு பொருளையும் நாம் அதிகமாக பயன்படுத்தாமல் வைத்திருந்தால், அது கெட்டு போய்விடும் அல்லது பழுதாகி விடும். அது பொருளுக்கும் மெசினுக்கும் மட்டும் இல்லை, நம்முடைய உடலுக்கும் பொருந்தும்.

எந்த ஒரு உறுப்பினை நாம் முழுவதுமாக பயன்படுத்தாமல் இருக்கின்றோமோ, அந்த உறுப்பு நம்முடைய அடுத்த பரிணாம வளர்ச்சியின் போது சிறியதாகவோ, அல்லது காணாமலோ போய்விட வாய்ப்புகள் இருக்கின்றன. அதுபோல, எந்த உறுப்பை நாம் தொடர்ந்து பயன்படுத்துகின்றோமோ அது நம்முடைய அடுத்த பரிணாம வளர்ச்சியின் போது பெரிதாக வளரலாம்.

தற்பொழுது இருக்கின்ற வாழ்க்கை சூழலை வைத்து பார்க்கின்ற போது அப்படி நம்முடைய அடுத்த பரிணாம வளர்ச்சியில் பெரிதாக வளரும் என்று எதிர்ப்பார்க்கிற ஒன்று நம்முடைய மூளை. காணாமல் போய்விடும் என்று எதிர்ப்பார்க்கிற ஒன்று நம்முடைய தலைமுடி.

இப்படி காலம் காலமாக மனிதன் பயன்படுத்தாமல் விட்டு அளவில் சிறியதாகி போன ஒரு உறுப்பு தான் இந்த குடல் வால் எனப்படும் அப்பெண்டிக்ஸ். ஆனால், இப்பவும் இது விலங்குகளின் பயன்பாட்டில் உள்ள ஒரு உறுப்பு. மனிதன் ஒரு முழு மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையாமல் விலங்காகவே இருந்த பொழுதும், பிறகு விலங்குகள் போன்று காடுகளில் வாழ்ந்த பொழுதும் இந்த உறுப்பு முழுமையாக பயன்பாட்டில்தான் இருந்தது. 

அதாவது, அப்பொழுது இருந்த விலங்குகளும், விலங்குகள் மாதிரி இருந்த மனிதனும் எந்த ஒரு உணவையும் சைவம், அசைவம் இரண்டையும் சமைக்காமல் அப்படியே உண்டு, வாழ்ந்தார்கள். இதில அசைவ உணவில  எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சைவ உணவில் ஒரு பிரச்சனை இருந்தது.

அசைவம் எனப்படும் இறைச்சி என்பது விலங்கு செல்களால் ஆனது. சைவம் என்பது தாவரங்கள். இந்த தாவர செல்களில், விலங்கு செல்களில் இல்லாத ஒன்று அதிகமாக இருக்கின்றது. அதுதான் பிரச்சனைக்கு காரணம். அதுவே.... செல் சுவர் ஆகும்.

இந்த செல் சுவர் என்பது விலங்கு செல்களில் இல்லாததால், நம்முடைய ஜீரண மண்டலம் தன்னிடம் உள்ள என்சைம்களை வைத்தே எளிதாக ஜீரணம் பண்ணிவிடும். ஆனால், சமைக்காமல் உள்ள தாவர உணவான இந்த செல்சுவர் கிட்ட நம்ம ஜீரண மண்டலத்தோட ஜம்பம் பலிக்காது. ஏன் என்றால், செல் சுவர் செல்லுலோஸ் என்கின்ற பாலி - சாக்ரைடால் ஆனது.

இந்த செல்லுலோசை ஜீரணம் பண்ண செல்லுலேஸ் என்கின்ற சிறப்பான என்சைம் தேவை. இந்த ஸ்பெசல் என்சைமை உற்பத்தி செய்யக்கூடிய உறுப்பு தான் இந்த குடல் வால்.  மத்த என்சைம்கள் இந்த செல்லுலோசை ஜீரணம் பண்ண முடியாததற்கு காரணம் செல்லுலோஸின் குளுகோஸ் மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டு இருக்கிற பிணைப்பு வேறுவிதமானதாக இருப்பதுதான் காரணம். இது போன்ற ஒவ்வொரு பிணைப்பும் அதற்கென உள்ள தனிப்பட்ட என்சைமால் மட்டும் தான் உடைக்க முடியும்.

ஆகவே அப்படி மனிதன் தன்னுடைய சாப்பாட்டை சமைக்காமல் சாப்பிட்டு வந்த அந்த காலத்தில் இந்த குடல் வால் தாவர உணவில் இருக்கும் செல்லுலோசை ஜீரணம் செய்யக்கூடிய செல்லுலேஸ் என்கின்ற என்சைமை உற்பத்தி செய்யும் வேலையை செய்து கொண்டு இருந்தது.

காலப்போக்கில், நெருப்பை கண்டுபிடித்த மனிதன் தன்னுடைய உணவை சமைக்க ஆரம்பித்ததும் இந்த என்சைமுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. தற்பொழுது சமைக்கும் பொழுது அந்த வெப்பத்தினால், செல்லுலோஸ் தானாவே உடைந்து விடுகிறது.

பல ஆயிரகணக்கான வருடங்கள் மனிதன் சமைத்து உண்பதினால், இந்த குடல் வால் படிப்படியாக வேலையிழந்து தன்னுடைய உருவம் இழந்து கடைசியாக தான் ஒரு காலத்தில் மனித உடலில் இருந்ததிற்கு அடையாளமாக, இன்றும் சிறிய வால் போன்று அந்த இடத்திலேயே ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

தற்பொழுது நாம் சமைக்காமல் சாப்பிடுகின்ற சில தாவர உணவுகளில் இருக்கின்ற செல்லுலோஸ் ஜீரணம் ஆகாமல்  அப்படியே வெளியேற்றப்படுது. ஆனால், விலங்குகள் இன்னமும் தாவர உணவை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் அதற்கு இன்னமும் இந்த குடல் வால் அப்படியேதான் உள்ளது.

அப்பண்டிசைடிஸ் என்கின்ற இந்த குடல் வால் சிறு குடலும், பெரும் குடலும் இணைகின்ற இடத்தில் இருப்பதினால், நம்முடைய குடலிலுள்ள கழிவு பொருள்களில் இருந்து சில சமயம் நோய் கிருமிகள் குடல் வாலுக்குள் சென்று தொற்று நோயை உண்டாக்கி வீக்கம், வலியை உண்டாக்கும். இது ஒரு  நிலைக்கு பிறகு இந்த குடல் வால் பெரிதாகன் வீங்கி வெடிக்கிற நிலைக்கு வந்து விடும்.

அது போன்ற வீங்கி வெடிக்கின்ற அளவிற்கு வந்துவிட்டால் நாம் கண்டிப்பா அறுவை சிகிச்சை மூலமாக இந்த நோய் தொற்றிய பகுதியை நீக்கியே ஆக வேண்டும். இல்லையெனில், அது உடைந்து, குடலுக்குள் இருக்கிற அத்தனை நோய் கிருமிகளும் ரத்தத்தில் கலந்து, நம்முடைய மொத்த உறுப்புகளுக்குமே பாதிப்பு உண்டாக்கி உயிர் போயிடும் நிலை உருவாகும். இது தான் அப்பண்டிசைடிஸ்.

ஆகவே குடல்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம், தேவையற்ற உணவுக்கழிவுகளை வெளியேற்றாமல் அடக்கி வைப்பது இதுபோன்ற நிலைக்கு நம்மை கொண்டு சேர்க்கும்.


No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...