Thursday, August 13, 2015

மூக்கில் நீர் ஒழுகுதல், சளி உருவாகுதல்




சிலருக்கு மூக்கிலிருந்து தண்ணீர் போன்று, பழுக்காத சளி ஒழுகிக்கொண்டே இருக்கும். அதைத்துடைத்துத் துடைத்து கைக்குட்டை நனைந்து விடும்.

இவ்வாறு மூக்கிலிருந்து நீர் ஒழுகுபவர்கள், காலையில் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், முசுமுசுக்கை இலைச்சாறு குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அல்லது முசுமுசுக்கை இலைப்பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், இதனை வாங்கி வைத்துக்கொண்டு தினமும் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பாட்டிற்கு முன்பு தேனில் குழைத்து உண்டு வந்தால் எளிதில் குணம் காணலாம்.

பொதுவாக சமைத்த தானிய உணவுகள், உப்பு, பால், அல்லது பால் பொருட்களான தயிர், டீ, காபி, மற்றும் பாலினால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள், முட்டை மற்றும் அசைவ உணவுகள் உண்பதினால் சளி உண்டாகின்றது.

இந்த சளி நாளடைவில் அதிகமாகி நுரையீரல், மூக்கு, மூச்சுக்குழல், இரத்தக்குழாய்களில் பரவிப் பிரைமரி காம்ப்ளக்ஸ், ஆஸ்துமா, காசம், சைனஸ் போன்ற நோய்களை ஏற்படுத்திக் காலப்போக்கில் மரணத்தினை வரவழைக்கின்றது.

எனவே சளி ஏற்படக்காரணமான மேற்கூறிய உணவுகளை இயன்ற அளவு குறைத்து அல்லது தவிர்த்து, தேங்காய், பச்சைக்காய்கறிகள், சமைத்த காய்கறிகள், கீரைகள், அவல், முளை வந்த தானியங்கள், அனைத்து வகை பழங்கள் என உணவாக உட்கொள்ள தொடங்கினால், உடலில் உள்ள சளி வெளிப்பட்டு ஆரோக்கியம் காக்கப்படும்.

சளியை அகற்ற ஆப்பிள் பழம், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை பழச்சாறு, மாதுளை பழச்சாறு ஆகியவைகளை உணவாக சேர்ப்பதினால் சளி விரைவில் வெளியேறும்.

துளசிச்சாற்றில் தேன் கலந்து அருந்தினால் சளி, தொண்டை வீக்கம், பிராங்கைடிஸ் போன்ற தொந்தரவுகள் நீங்கும்.

கண்டக்கத்திரி, வல்லாரை இலைச்சாறு, துளசி இலைச்சாறு, கருந்துளசிச் சாறு, நெல்லிச்சாறு, வில்வ இலைச்சாறு, முசுமுசுக்கை இலைச்சாறு, மணத்தக்காளி இலைச்சாறு, தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைகளில் எதனை வேண்டுமானலும் உட்கொண்டு சளியை நீக்கலாம்.

கண்டங்கத்திரியும், நெல்லிக்காய்ச் சாறும் மூக்கடைப்பை போக்குகின்றன.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...