Thursday, August 13, 2015

உண்ணா நோன்பும் உற்சாகமான வாழ்வும்!




ஒவ்வொரு மனிதனுக்கும் ஜீவசக்தி என்ற உயிராற்றல் (Vital Force) இன்றியமையாதது. இந்த சக்தியை நாள்தோறும் ஒவ்வொருவரும் நம்முடைய அறியாமையினால் செலவு செய்து கொண்டிருக்கின்றோம்.
எப்படி நம்முடைய வங்கியில் இருக்கும் பணம் எடுத்து செலவு செய்ய செய்ய குறைந்துக்கொண்டே வருமோ? அதுபோல மனிதன் தனது அன்றாட செயல்களினால் தனது உயிராற்றலை செலவு செய்து கொண்டே வருகின்றான்.
ஆயிரத்தில் ஒருவன் தான் அந்த ஜீவ சக்தியை சேமிக்கவும் விரும்புகின்றான்.
இவ்வாறு அந்த ஜீவ சக்தியை சேமிக்க நம் முன்னோர்கள் வகுத்த வழிமுறைகளில் ஒன்றுதான் இந்த உண்ணா நோன்பு என்பதாகும்.
மனிதன் வேகவைத்த மாவுப்பொருட்களான மைதா, அரிசி, கோதுமை, பால் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிட்டு செரிமானம் செய்ய 22 அடி நீள குடலில் அதிகமான ஜீவ சக்தி தேவைப்படுகின்றது.
அதாவது நுரையீரல், தோல், மலக்குடல் போன்ற உறுப்புகள் உண்ட உணவின் செரிமானத்திற்கு பிறகு வரும் கழிவுகளை வெளியேற்ற அதிகப்படியான உயிராற்றலை எடுத்துக்கொள்கின்றது.
மேலும், சிறு நீரகத்தில் உள்ள 18 இலட்சம் நெப்ட்ரான்களும் இரத்தத்தினை சுத்தம் செய்ய அதிகப்படியான ஜீவ சக்தியை எடுத்துக்கொள்கின்றது.
இன்றைய மனிதன் தனது தவறான உணவுப் பழக்க வழக்கங்களினால் உடலை அதிகம் வருத்தி கழிவுகளை அதிகம் உடலில் தேங்க வைத்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றான்.
இடைவெளி இல்லாமல் எதனையாவது அடிக்கடி சாப்பிடுவது, பசி வரும் முன்போ அல்லது பசி எடுத்து தாமதமாகவோ சாப்பிடுவது, ஃபாஸ்ட்புட், பீஸா, மற்றும் மைதாவினால் தயாரிக்கப்பட்ட உணவு பண்டங்களை விரும்பி உண்பது போன்றவைகளினால் செரிமானம் பாதிக்கப்பட்டு உணவுக் கழிவுகளை உடலில் சேர்த்து கல்லீரல் மற்றும் சிறு நீரக பாதிப்புகளுக்கு அனேகம் பேர் உள்ளாகின்றனர்.
மனிதன் உண்ணா நோன்பு இருக்கும் காலத்தில் அவனது ஜீவ சக்தி செலவாகாமல் சேமிக்கப்படுவதுடன், கழிவுகளை எல்லாம் வெளியேற்றவும் செய்கின்றது.
இன்றைய காலத்தில் இராசாயனம் கலக்கப்படாத தூய்மையான உணவு கிடைப்பது அறிதாக இருப்பதினால், நிச்சயமாக வாரம் ஒரு நாளாவது உண்ணா நோன்பினை கடைப்பிடித்து உடலில் தேங்கியுள்ள இராசயனக்கழிவுகள் வெளியேறுவதினை அனுமதிக்க வேண்டும்.
நாம் உட்கொள்ளும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், நீர் மற்றும் காற்று முதலானவைகளிலிருந்து விஷத்தன்மைகள் வெளியேற குறைந்தது வாரத்திற்கு ஒரு நாளாவது உண்ணா நோன்பினை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
அடிக்கடி உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிறு சுருங்கும், குடல் சுருங்கும், தொப்பை குறையும், உடல் எடை குறைந்து ஆகாயத்தில் பறப்பது போன்றும், நல்ல எண்ணங்களுடனும், சோர்வு தெரியாமல் எப்பொழுதுமே தேனீக்கள் போன்று சுறுசுறுப்பாக செயலாற்ற முடியும்.
முன்பு சாப்பிட்டு வந்த உணவு அளவு பாதியாக குறையும், அதிக உணவே அசதிக்கு காரணம் என்பது தெளிவாக புரியும், நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தில் (எத்தனை மனிதர்கள் கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம் தூங்குகின்றனர்?) அதிகப்படியான ஜீவ சக்தியை பிரபஞ்ச சக்தியிடம் எளிதாக பெற்று என்றுமே ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம்.
குறிப்பு:-
அல்சர் நோயாளிகள் உண்ணா நோன்பு இருக்கும் நாட்களில் பழ இரசங்கள் அல்லது காய்கறி சூப்புகள் இடை இடையே அருந்தி சில வாரங்கள் பழகி விட்டு பிறகு முழு உண்ணா நோன்பு கடைப்பிடிப்பது நலம்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...