1. உருளைக்கிழங்கு
உடலுக்கு நல்ல பலம் தரும். உடல்
உஷ்ணத்தை தணிக்கும், வாத சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணமாக்கும், உடலிலுள்ள புண்,
சிரங்குகள் மறையும், சிறு நீரைப் பிரித்து சுலபமாக வெளியேற்றும். சிறிது வாய்வு
உண்டுபண்ணும்.
2. கோவைக்காய்
சளியை முறிக்கும்.
காய்ச்சலைத்தணிக்கும். உடல் உஷ்ணத்தை தணித்து சமப்படுத்தும்.
3. பேரிச்சம்பழம்
உடலுக்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.
இரத்தத்தை விருத்தி பண்ணும். பித்த சம்பந்தமான வியாதியைக் குணப்படுத்தும்.
நீரிழிவு நோயை தணிக்கும்.
4. எலுமிச்சைப்பழம்
இது பித்த சம்பந்தமான நோயைக்
குணப்படுத்தும், கண் நோயைப் போக்கும், ஊறுகாய் போட்டுபயன் படுத்தலாம்,
மருந்துகளுக்கு பயன்படும்.
5. தக்காளிப்
பழம்
எலும்பைப் பலப்படுத்தும், நரம்புக்கு
பலம் உண்டாகும், இரத்தத்தைச் சுத்தம்
செய்யும் உடல் உஷ்ணத்தை தணிக்கும், சொறி, சிரங்கு, இரணங்களைப் போக்கும். தோலில்
வழுவழுப்பும், மினுமினுப்பும் உண்டாகும், உடலில் வீக்கம் இருந்தால் அதை வடியச்
செய்யும். சிறுநீர் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும்.
குறிப்பு :- நாட்டு
தக்காளி நல்லது.
6. எள்ளெண்ணை
(அ) நல்லெண்ணை
இது பெயருக்கு ஏற்பவே நல்ல எண்ணை தான்
அறிவைத் தெளிவுபடுத்தும், உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும், கண், காது
சம்பந்தமான வியாதியைக் குணப்படுத்தும்.
7. உப்பு
ஆகாரத்திற்க்கு ருசியை அதிகப்படுத்த
உப்பு அவசியம், இது ஆகாரத்தை ஜீரணிக்கவும், இரத்தத்திற்க்குத் தேவையான சக்தியை
அளிக்கவும் உப்பு அவசியம்.
குறிப்பு :-
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
என்பதுபோல உப்பை அதிகம் சேர்த்தால் இரத்தக் கொதிப்பு அதிகமாகும்.
8. வெண்டைக்காய்
இது மூளைக்கு நல்ல பலம் தரும். அறிவை
வளர்க்கும், உடல் உஷ்ணத்தைத் தணித்து சமப்படுத்தும். மலத்தை இளக்கி வெளியேற்றும்.
கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
குறிப்பு : -
நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காயை சிறு
சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சிறிய கிண்ணத்தில் உள்ள நீரில் இரவில் ஊரவைத்து காலை
எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் தொடர்ந்து குடித்துவந்தால்
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். இது அனுபவ உண்மை.
9. தேங்காய்
தேங்காயை வேகவைத்து குழம்புடன்
சாப்பிடும் பொழுது கொழுப்பை அதிக அளவு உற்பத்தி செய்யும். பச்சையாய் சப்பிட்டால்
நல்ல பலம் தரும், வாயு சம்பந்தமான வியாதிகளைக் கட்டுப்படுத்தும். தாதுவை விருத்தி
செய்யும். சொரி, சிரங்கு புண்களை ஆற்றும். தேங்காய் பால் எடுத்து வெறும் வயிற்றில்
குடித்தால் குடல் புண்களை குணப்படுத்தும்.
10. காசினிக்கீரை
இரத்தத்தைச் சுத்தம் செய்வதில்
முதன்மையான கீரை இது. உடலில் உள்ள வீக்கத்தை வாடச் செய்யும்.
விரைவில்
அடுத்து வரும் ..............
No comments:
Post a Comment