Monday, July 23, 2012

மஞ்சள் காமாலை தடுப்பூசி



மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை வரும் !!

மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் மஞ்சள் காமாலை வரும் !!
அப்படி யென்றால் அந்த ஊசி பலன் இல்லாததாமுதலில் மஞ்சள் காமாலை பற்றி தெரிந்து கொள்வோம்
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய்க்குறி. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை.
ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும். ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும்.
அதற்கு முன் கொஞ்சம் அடிப்படை மருத்துவம் பயிலலாம்.
இரத்ததில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
இதில் சிவப்பணுவினுள் (Red Blood Cells – RBC) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது. சிவப்பணுக்கள் சாகா வரம் பெற்றவை அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட காலம் பணி செய்த பின் இறந்து விடுகின்றன. அப்படி இறந்த சிவப்பனுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை அன்கான்ஜுகேடட் பிலிரூபின் (Unconjugated Bilirubin) (எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின்) என்று அழைக்கிறார்கள்
இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள் (வாட்டர் இன்சால்யுபிள்) எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. (கொஞ்சம் வெளியேரும்) இதற்கு நமது உடலில் ஒரு அருமையான ஏற்பாடு உள்ளது. ஈரலில் (லிவர்) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (குலுக்குரோனிக் ஆசிட்) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது (கான்ஜுகேடட் பிலிரூபின்) (Conjugated Bilirubin) இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினை சிறு நீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.


ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பைக்கு (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது.
இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்.

வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால்
அதிக அளவு பிலிரூபின் உருவாகிறது. 2. இதில் ஒரு பகுதி இணைக்கப்பட்ட பிலிரூபினாகிறது 3. மீதி இணைக்கப்படாத பிலிரூபினாக இரத்தத்தில் உள்ளது. 4. இணைக்கப்படாத பிலிரூபின் அதிக அளவில் சிறுநீரில் வெளியேறுகிறது. எனவே சிறுநீர் வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அதாவது நிறமல்லாமல். இதனால் இந்த வியாதியை நிறமல்லா சிறுநீர் மஞ்சள் காமாலை என்றும் அழைக்கலாம் (acholuric jaundice)

இந்த வியாதியை ப்ரீ ஹெபாடிக் ஜாண்டிஸ் (Pre hepatic Jaundice – அதாவது பிலிருபீன் வழக்கமாக செல்லும் பாதையில் ஈரலுக்கு முன்னர் கோளாறு உள்ளது) என்று அழைப்பார்கள். பொதுவாக இரத்த அணுக்கள் அதிகம் உடைபடும் வியாதிகளில் (ஹீமோலைடிக் டிஸாடர் – hemolytic disorders) இந்த வகை மஞ்சள் காமாலை வரும். இந்த வகை மஞ்சள் காமாலைக்கு வைத்தியம் பார்க்க முதலில் இரத்த சிவப்பணுக்கள் உடைபடுவதை தடுக்க வேண்டும்.
ஈரல் வேலை செய்யாவிட்டாலோ அல்லது வழகத்திற்கு குறைவாக வேலை செய்தாலோ 1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் இரத்ததில் தேங்குகிறது 2. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்படாத பிலிரூபின் வெளியேறுகிறது.
இந்த வகை வியாதிகளை ஹெபாட்டிக் ஜாண்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது பிரச்சனை ஈரலில் உள்ளது.
ஈரலில் என்ன பிரச்சனை என்றால்
1.
வேதியல் பொருட்களால் இருக்கலாம். 2. சில வகை மருந்து பொருட்களால் இருக்கலாம். மருந்துக்களில் பல ஈரலையும் சிறுநீரகத்தையும் நாசம் செய்ய வல்லவை. பக்க விளைவு இல்லாத மருந்து எதுவும் கிடையாது (இது குறித்து விளக்கமாக வேறு இடுகையில் பின்னர் பார்க்கலாம்)

முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்களளில் 7 வகைகள் உள்ளன. 1. ஹெபடைட்டிஸ் A2. ஹெபடைட்டிஸ் B3. ஹெபடைட்டிஸ் C4. ஹெபடைட்டிஸ் D5. ஹெபடைட்டிஸ் E6. ஹெபடைட்டிஸ் F7. ஹெபடைட்டிஸ் G இது போன்ற ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன. எனவே இது தானாகவே சரியாகிவிடும். கொஞ்ச நாட்களுக்கு எண்ணை மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இல்லாத உணவை சாப்பிட்டால் போதும்.

ஈரலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் எதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என்ன நடக்கும்
1.
வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் வழக்கமாக செயல்படும் ஈரலினால் இணைக்கப்பட்ட பிலிரூபினாக மாற்றப்படுகிறது. 2. பித்த நீர் வழியாக வெளியேற முடியாத இணைக்கப்பட்ட பிலிரூபின் மீண்டும் இரத்ததில் சேறுகிறது.
3. இரத்ததில் அளவிற்கு அதிகமான இணைக்கப்பட்ட பிலிரூபின் உள்ளது. 4. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்பட்ட பிலிரூபின் வெளியேறுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது .5. இரைப்பைக்கு பித்த நீர் வராததால், கொழுப்பு சத்து ஜீரனிக்கப்படுவதில்லை. 6. எனவே மலத்தில் கொழுப்பு சத்து வெளியெறுகிறது 7. மலம் வெள்ளை நிறமாக உள்ளது.
இது போன்ற நிலைமைகளை போஸ்ட் ஹெபாடிக் ஜான்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது ஈரலிலிருந்து பிலிரூபின் வெளியேறியபின் பிரச்சனை. அதுவும் பெறும்பாலும் எதேனும் அடைப்பு. இந்த அடைப்பு ஈரலுக்கு உள்ளும் இருக்கலாம் இதில் 20 வயதிற்கு மேல் திடீரென்று ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்து மலம் வெள்ளை நிறமாக அதிக கொழுப்புடன் வருகிறது என்றால் அதற்கு காரணம் எதோ அடைப்பு.
அது பித்த கற்களாகவும் (பைல் ஸ்டோன் Bile Stone) இருக்கலாம் அல்லது புற்று நோயாகவும் (கான்ஸர் Cancer) இருக்கலாம்.

சரி இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டிய விஷயம்  மஞ்சள் காமாலை பல காரணங்களினால் வரும்.
சரி இப்பொழுது முதலில் நாம் பார்த்த கேள்விக்கு வருவோம்.
மஞ்சள் காமாலை தடுப்பூசி என்று அனைவரும் போடுகிறார்களே. அது என்ன
இங்கு (முக்கியமாக முகாம் அமைத்து தனியாரால்) போடப்படும் மஞ்சள் காமாலை தடுப்பூசி என்பது ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமிக்கு மட்டும் எதிரானது தான்
இந்த தடுப்பூசி போட்டால் மஞ்சள் காமாலை வராதா இந்த தடுப்பூசி போட்டால் ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி மற்றும் ஹெபடைடிஸ் D வைரஸ் கிருமியினால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்கள் மட்டுமே வராது. பிற வைரஸ் கிருமிகள் அனைத்து பேக்டிரியா கிருமிகள் அனைத்து பங்கஸ் கிருமிகள் அனைத்து பூச்சிவகைகள் அனைத்து புழுக்கள் அனைத்து ப்ரீ ஹெபாடிக் வகைகள் அனைத்து போஸ்ட் ஹெபாடிக் வகைகள் மூலம் வரும் அனைத்து மஞ்சள் காமாலைகளும் வரும்
பொதுவாக வரும் மஞ்சள் காமாலை என்ன வகைஹெபடைடிஸ் A வைரஸ் கிருமியினால் வருவது. நீங்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டாலும் இந்த வகை மஞ்சள் காமாலை தொடர்ந்து வரும்
அப்படி யென்றால் இந்த தடுப்பூசியினால் என்ன பலன் ஹெபடைடிஸ் A வைரஸ் கிருமியினால் வரும் மஞ்சள் காமாலை என்பது தானாக சரியாகிவிடும். இதனால் உயிருக்கு ஆபத்து கிடையாது. வைத்தியம் தேவையில்லை

ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமியினால் வரும் மஞ்சள் காமாலை என்பது தானாக சரியாகாது. இதனால் உயிருக்கு ஆபத்து உண்டு. கண்டிப்பாக வைத்தியம் தேவை

வேறு ஏதாவது வித்தியாசம் உள்ளதா ஹெபடைடிஸ் A வைரஸ் கிருமி நீர் மூலம் பரவும் (அதாவது குடிநீர் மூலம்). சுருங்கச்சொன்னால் காலரா எப்படியெல்லாம் பரவுமோ, அப்படியெல்லாம் ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி இரத்தம் மூலம் பரவும் (அதாவது இரத்தம் ஏற்றுவது, ஒருவருக்கு போட்ட ஊசியை அடுத்தவருக்கு போடுவது, ஒருவரின் இரத்தம் நமது உடலில் படுவது, பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் போன்றவை. இந்த மருந்து பெரும்பாண்மையான தடுப்பூசிகளை போல் கிருமிகளிலிருந்து செய்யப்படுவது அல்ல. (ஆம் பெரும்பாலான குழந்தைகளுக்கு தற்பொழுது போடப்படுகின்ற அனைத்து தடுப்பூசிகளும் அந்தந்த  நோய்க் கிருமிகளை குழந்தைகளின் உடலில் தடுப்பூசியாகப் போடப்படுகிறது.இது குறித்து விளக்கமாக வேறு இடுகையில் பின்னர் பார்க்கலாம்.)அதற்கு பதில் நவீன முறைகளினால் வேதியல் பொருட்களிலிருந்து செய்யப்படுவது. ஹெபடைடிஸ் B வைரஸ் கிருமி தடுப்பூசியினால் பலன் உண்டா? என்பதை நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...